திருச்சியில் கஞ்சா……கண்டுக்கொள்ளுமா காவல்துறை!!!

0
D1

திருச்சியில் சமீபகாலமாக போதைப்பொருட்களின் ஆதிக்கம் தலைதூக்கி காணப்படுகிறது, பட்ட பகலில் கல்லூரிகளின் வாசலிலே மாணவர்களுக்கு போதைபொருட்கள் எளிமையாக விநியோகிக்கப்படுகின்றன.

சமீபத்தில் விராலிமலை செல்லும் சாலையில் நாகமங்கலம், ஆலம்பட்டி பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு ஒரு தனியார் பள்ளியும், கல்லூரியும் செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில் 25 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், இரு சக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்றுவருவதாக தகவல் வெளிவந்தது. அதனடிப்படையில் கஞ்சா விற்றுவரும் நபரின் புகைப்படத்துடன் கூடிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்(SP) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

D2
N2

கொடுத்த தகவலின் அடிப்படியில் நடவடிக்கைகள் எடுப்பதாக கூறிய அதிகாரிகள் தகவல் கொடுத்து ஒரு வாரங்களுக்கு மேலாகியும், சம்பந்தப்பட்ட நபரின் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கைகளும் எடுத்தது போல தெரியவில்லை.

மேலும் இதுப்போன்ற குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்களின் மீது உடனே நடவடிக்கைள் மேற்கொள்ளாத காரணத்தினால் தான் திருச்சியில் போதைப்பொருட்களின் ஆதிக்கம் தலைவிரித்து திரிகிறது. இதற்கு என்ன நடவடிக்கைள் மேற்கொள்ள போகிறார் திருச்சி எஸ்.பி………

ஜெ.கே

N3

Leave A Reply

Your email address will not be published.