பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்

மனிதர்களுக்கு குழந்தைசெல்வம் என்பது ஒரு முக்கியமான ஒன்று. பள்ளியில் மாணவன் படித்துக்கொண்டிருக்கும் போது 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடன் தேர்ச்சி பெற்றுவிட்டாயா என்று கேட்போம். எத்தனை மார்க் என்பதுதான். அதுபோல் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டவுடன், அடுத்த கேள்வி குழந்தை இருக்கிறதா? என்று கேட்பது இயல்பு. குழந்தைகளை தெய்வத்திற்கு சமமாக பார்க்கிறோம். இத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த நிபுணராக திகழ்பவர் திருச்சி சாலை ரோட்டில் உள்ள குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்
டாக்டர். பாலாஜி. இவரது மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்களான வாந்தி, பேதி, மற்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எல்லா வகையான தடுப்புசிகளும் அந்தந்த காலகட்டத்தில் போடப்படுகிறது.
மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாத காலம் வரை தாய்பால் மட்டுமே தர வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
குழந்தைகளுக்கு டயாபடிக் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் குழந்தைகளை பராமரிப்பதற்கு தாத்தா, பாட்டியிடம் விட்டு செல்கின்றனர். குழந்தைகளுக்காக பெற்றோரும் சிறிது நேரம் செலவிட வேண்டும்.
கர்ப்பம் தரித்து 37 வாரங்களுக்கு குறையாமல் கர்ப்பப்பையில் குழந்தை இருந்தால்தான் பிரசவம் சுலபமாக இருக்கும்.


அதற்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். அத்தகைய குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறோம். சீரான வளர்ச்சி பெற்றவுடன் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கிறோம். குழந்தைகள் மொபைல், யூட்யூப், டிவி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தாமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் மிக முக்கிய கடமையாகும். அனைவருக்கும் தமது தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்ளை தெரிவித்து கொள்கிறார்.
இவரது பணி மேலும் சிறக்க நம்ம திருச்சி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
