புண்டரீகாட்சப் பெருமாள் கோயில்  பற்றி தெரிந்து கொள்வோம்

0

திருச்சி, துறையூர் சாலையில் உள்ளது திருவெள்ளறை.

இங்கு ஸ்ரீராமபிரானுக்கு ஏழு தலைமுறைக்கு முந்தைய சிபி சக்ரவர்த்தியால் கட்டப்பட்ட ‘ஸ்வேதகிரி’ எனப்படும் புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் உள்ளது.

ஸ்ரீரங்கத்தைக் காட்டிலும் தொன்மையான தலம் என்பதால், ஆதிவெள்ளறை என்று கூறப்படுவதுண்டு.

‌சந்தா 1
சந்தா 2

வெண்மையான பாறையால் ஆன தொன்மையான மலை எனப் பொருள்படும். அயோத்திக்கு அதிபதியாய் விளங்கிய சிபி சக்ரவர்த்தி, தனது படை பரிவாரங்களுடன் திருவெள்ளறையில் தங்கியிருந்தார். அங்கு தோன்றிய வெள்ளைப் பன்றியை(ஸ்வேத வராஹம்) துரத்த, அது பக்கத்தில் உள்ள புற்றில் சென்று மறைந்தது. இதைக்கண்டு சிபி ஆச்சர்யமுற்று, அங்கேயே தவமிருந்து  பின்னர் அவ்வழியாக வந்த மார்க்கண்டேயரை வினவினார்.  அவர் சொன்னதன் பேரில் பன்றி மறைந்த அப்புற்றுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்து வழிபட்டார். பெருமாள் சிபி சக்ரவர்த்திக்கும், மார்க்கண்டேயருக்கும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்தார். இதனாலேயே ‘ஸ்வதே வராஹத் துருவாய் தோன்றினான் வாழியே’ என்ற திருப்பெயரும் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. ஸ்வேத வராகனாக(வெள்ளைப் பன்றி உருவில்) பெருமாள்  காட்சியளித்ததால், பெருமாளுக்கு ஸ்வேதபுரிநாதன் என்ற பெயர் ஏற்பட்டதாக தல  புராணம் கூறுகிறது. எனவேதான் இத்தலத்துக்கு ஸ்வேதபுரி நட்சத்திரம் என்ற  பெயர் வந்தது.பல்லக்கு புறப்படும்போது தாயார் பல்லக்கு முன்செல்ல, மூலவர் பல்லக்கு அதைத் தொடர்ந்து செல்லும். மற்ற இடங்களில் பெருமாள் முன்செல்ல தாயார் பின்தொடர்வார். சூரியன், சந்திரன் சாமரம் வீச மார்க்கண்டேயருடன் ஆதிசேஷன், பூமிப்பிராட்டி ஆகியோர் பிரார்த்தனை செய்ய மூலவர் புண்டரீகாட்சப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.

செங்கமலவல்லித் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. தசாவதாரம், பன்னிரு ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், மணவாளமாமுனிகள், ராமானுஜர், உய்யக்கொண்டார், எங்களாழ்வான் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலைச் சுற்றி கமலம்(தாமரை), வராகம், மணிகர்ணிகா மற்றும் குசலவ தீர்த்தங்களும், கோயிலின் உள்ளே சந்திரபுஷ்கரணியும்( சுனை தீர்த்தம்) உள்ளது.

சுனை தீர்த்தத்திலிருந்து அமுதுபடிகளுக்கு நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கோயிலில் உத்தராயணம், தட்சணாயனம் என 2 வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமாளைத் தரிசிக்க வேண்டும். பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.