வெப் சீரியஸாக வரவிருக்கும் பொன்னியின் செல்வன்

0
1

பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக செளந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாக போற்றப்படும் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் திரையில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக பலரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிப்பதாக வெளியான செய்திகளையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவரிடம் இப்படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “மணிரத்னம் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், இந்த செய்தி வெளியில் கசிந்துவிட்டது. அவர் படத்தில் நான் வேலை செய்வது உண்மை தான்” என்று கூறியிருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், பூங்குழலியாக நயன்தாராவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்ட மற்ற நடிகர், நடிகைகள் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸ் வடிவில் தயார் செய்ய முயற்சித்து வருவதாக வெளிவந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், வெப் சீரிஸுக்கான பணிகளைத் துவங்கி விட்டதாகவும், இது குறித்த அனைத்து அப்டேட்களும் வெளியிடப்படும் எனவும் டிவீட் செய்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன் – இது ஒரு காவியம். இதை செய்ய வேண்டும், சரியாக செய்ய வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார். பிரபல வீடியோ ஸ்ட்ரீம் நிறுவனமான எம்எக்ஸ் பிளேயர் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த வெப் சீரிஸைத் தயாரிக்கவுள்ளது. சூர்யா பிரதாப் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிகளிலும் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3

Leave A Reply

Your email address will not be published.