பெட்ரோல் நிலையங்கள் அதிகரித்தால் ஆபத்து!

0
Business trichy

இந்தியாவில் புதிதாக 78,000 பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படவிருக்கும் நிலையில், இதனால் பொருளாதார இழப்புதான் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில், நாடு முழுவதும் புதிதாக 78,493 பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தன.
இதுதவிர, தனியார் நிறுவனங்களும் புதிதாகப் பெட்ரோல் நிலையங்களை அமைத்து வருகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் பிபி நிறுவனமும் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6,000 புதிய பெட்ரோல் நிலையங்களைத் திறக்க ஒப்பந்தம் செய்துள்ளன. ராயல் டச் ஷெல் நிறுவனம் 200 பெட்ரோல் நிலையங்களைத் திறக்கவுள்ளது.

ஏற்கெனவே 64,624 பெட்ரோல் நிலையங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 78,000 பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டால் பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்படும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
புதிதாகத் திறக்கப்படவிருக்கும் 78,000 பெட்ரோல் நிலையங்களில் 30 சதவிகிதம் அளவு (30,000 பெட்ரோல் நிலையங்கள்) மட்டும் திறக்கப்பட்டாலே அடுத்த 12 ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும் என கிரிசில் நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

MDMK

தற்போதைய நிலையில் பெட்ரோல் நிலையங்களின் சராசரி விற்பனை அளவு 160 கிலோ லிட்டர்களாக உள்ளது. இதே அளவு நீடித்தாலே பெட்ரோல் நிலையங்களுக்கு 12 முதல் 15 சதவிகிதம் வரையில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது விற்பனை அளவு குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் என்று இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் திறக்கப்படவிருக்கும் 78,439 பெட்ரோல் நிலையங்களில் 68 சதவிகிதம் அளவு தேசிய நெடுஞ்சாலைகளிலும் நகர்ப்புறங்களிலும் திறக்கப்படவுள்ளன.

Kavi furniture

எஞ்சிய 32 சதவிகித பெட்ரோல் நிலையங்களைக் கிராமப்புறங்களில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டில் மொத்தம் 2,02,800 பெட்ரோல் நிலையங்கள் இருந்ததாகவும், அந்த எண்ணிக்கை தற்போது 1,50,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.