பிகில் விஜய் கேரக்டர் – EXCLUSIVE

0
1

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பல்வேறு ஊகங்களை உருவாக்கியிருக்கின்றன. தற்போது வெளியான மூன்றாவது போஸ்டரில் விஜய் ’5’ஆம் எண் கொண்ட ஜெர்சியும், கைலியும் அணிந்தபடி சைக்கிள் செயினை கையில் தயாராக வைத்திருக்க காவல் துறையினர் அவரை தாக்க துரத்தி வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

விஜய் இந்துவா, கிறிஸ்டியனா?

விஜய் ரசிகர்களுக்கு விஜய் யாராக வந்தாலும் பிரச்சினை இல்லை என்றாலும், சினிமாவைத் தாண்டி ஒரு படத்தைப் பார்க்கும் சிலர் ஏற்கனவே விஜய்யை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். முதல் போஸ்டரில், விஜய் காவி வேட்டி கட்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமத்துடன் தோற்றமளித்ததாலும், அவருக்கு அருகே ஒரு கத்தி வைக்கப்பட்டிருந்ததாலும், இந்துக்களை வன்முறையாளர்களாக காண்பிக்கிறார் விஜய் என்றும், அவர் சார்ந்த கிறித்துவ மதத்தையும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், இரண்டாவது போஸ்டரில் விஜய்யின் கழுத்தில் இடம்பெற்ற சிலுவை சங்கிலி அவர்களை ஆஃப் செய்துவிட்டது. ஆனால், நெற்றியில் குங்குமத்துடன், கழுத்தில் சிலுவை எதற்கென்ற கேள்வி ரசிகர்களிடையே உண்டாகியிருக்கிறது. இதற்கு காரணம், விஜய்க்கு படத்தில் வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான காட்சி தான். சர்கார் படத்தில் வட சென்னைப் பகுதி மக்களிடையே விஜய் பேசும் காட்சி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதேபோன்றதொரு காட்சியில், கழுத்திலிருக்கும் சிலுவைக்கும், நெற்றியிலிருக்கும் குங்குமத்துக்கும் விஜய் பதில் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள காட்சிக்காகவே அப்பா விஜய்யின் கேரக்டர் இப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மதம், சாதி, இனம் மறுத்த கலப்புத் திருமணம் என பட்டாசாக திரைக்கதை உருவாகியிருக்கிறது என்கிறார்கள்.

2

விஜய்க்கு எத்தனை ரோல்கள்?

விஜய் பிறந்தநாள் சிறப்பாக வெளியிடப்பட்ட முதல் போஸ்டரில் விஜய்யின் கால்களில் ஒரே மாதிரியான காயத்தின் வடு இருப்பதாலும், இருவரது தாடி மற்றும் தோற்றம் ஒரே மாதிரியாக இருப்பதாலும், அப்பா-மகன் கேரக்டரில் நடிக்கிறார்களா? அல்லது ஒரே விஜய் கேரக்டர் வயதான தோற்றத்திலும், ஃபிளாஷ்பேக்கில் இளம் விஜய்யையும் காண்பிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு பதில், விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல, விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள் தான். அந்த காயம் எடிட்டிங் மிஸ்டேக்காக இருக்கலாம். மீன் வியாபாரம் செய்யும் கேரக்டரில் அப்பா விஜய்யும், கால்பந்தாட்ட பயிற்சியாளராக மகன் விஜய்யும் வருகின்றனர்.

விஜய் ஃபுட்பால் பிளேயரா?

விளையாட்டு வீரராக பல படங்களில் விஜய் தோன்றியிருந்தாலும், இந்தப் படத்தில் விஜய்க்கு அந்த வேலை இல்லை. ஃப்ளாஷ்பேக்கிலும் சரி, நிகழ்காலக் கதையிலும் சரி விஜய் விளையாடுவது போன்ற காட்சி படத்தில் இல்லை. பெண்கள் அணியின் பயிற்சியாளராக மட்டுமே விஜய் வருகிறார். ஒரு காலத்தில் திறமையான வீரராக இருக்கும் விஜய்க்கு, வாய்ப்பு கிடைக்காததால் அவர் பயிற்சியாளராக மாறுகிறார் என்று பிகில் படத்தின் கதை யூகிக்கப்பட்டது. ஆனால், தொடக்கத்திலிருந்தே விஜய் பயிற்சியாளராக மட்டுமே இருக்கிறார்.

கமெர்ஷியல் படமா? ஸ்போர்ட்ஸ் படமா?

சோஷியல் அவர்னஸ் படமாக இருந்தாலும், ஸ்போர்ட்ஸ் படமாக இருந்தாலும் விஜய் நடித்தால் அது கமெர்ஷியல் படமாகவே இருக்கும் என ஒரு கருத்து இந்தப்படத்தைப் பற்றி முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவு. கமெர்ஷியலைவிட, சமூகத்துக்குத் தேவையான படமாக இருக்கவேண்டும் என விஜய் கூறிவிட்டதால், இதை முடிந்த அளவுக்கு ஸ்போர்ட்ஸ் படமாகக் காட்டவே அட்லீ விருப்பப்படுகிறார். இதற்காகவே, ஸ்போர்ட்ஸ் கிரவுண்டுகளில் பயன்படுத்தப்படும் ஸ்பைடர் கேமராவை அதிக செலவு செய்து கொண்டுவந்திருக்கின்றனர். அதனைப் பயன்படுத்த, ஜெர்மனிலிருந்து கேமரா மேன் ஒருவரையும் வரவழைத்திருக்கின்றனர். மேலும், ஏமி மெக்டேனியல் என்ற ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான காட்சிகளை வடிவமைக்கும் கலைஞரையும் வரவழைத்திருக்கின்றனர். இவர், Pele: Birth of a Legend என்ற ஹாலிவுட்டின் சிறந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தில் பணியாற்றியவர்.

விஜய்யின் பெயர் என்ன?

மகனாக நடிக்கும் விஜய்யின் பெயர் மைக்கேல் என்பது இரண்டாவது போஸ்டரின் மூலம் தெரிந்துவிட்டது.
அப்பாவின் பெயர் என்னவாக இருக்கும் என்ற யூகத்தில் விஜய் ரசிகர்கள் ஆழ்ந்திருக்க, பலரும் படத்துக்கு தொடர்புடைய பல பெயர்களைக் கூறுகின்றனர். ஆனால், அப்பா கேரக்டரில் வரும் விஜய்யின் பெயர் தான் பிகில். மெர்சல் படத்தைப் போல தளபதி மாதிரியான மெர்சல் பெயரைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்கிறபோதும், கதைக்கும், அது நடைபெறும் களத்துக்கும் மாறுபட்ட வகையில் எதுவும் செய்யவேண்டாம் என விஜய் கூறியிருந்ததால் சென்னையின் மீனவ கிராமத்தில், அப்பா விஜய் வாழும் காலத்தில் வைக்கப்பட்ட பெயர்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதில் ஒன்றான ‘பிகில்’ என்ற பெயரையே அந்த கேரக்டருக்கு வைத்தனர். பிறகு, டைட்டில் பற்றி யோசிக்கும்போது மைக்கேல், பிகில் ஆகிய பெயர்களை முன்மொழிந்து கடைசியாக பிகில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.