பட்டாபிஷேகத்திற்கு ரெடியாகும் உதயநிதி ஸ்டாலின்…

0
Business trichy
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தேதி (27.11.1977) (UDHAYANIDHI STALIN 6+4+5+1+1+1+5+1+4+5+1+3+4+1+3+1+5=51=5+1=6)
பிறந்த தேதி 27 = 2+7 = 9
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தேதி கூட்டு எண் 9. பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டு எண் 8. உதயநிதி ஸ்டாலினின் பெயர் எண் 6.
Image
உதயநிதி கலைஞர் குடும்பத்தில் பிறந்த தனி பிறவி. கலைஞர் போராட்டக்காரர். உதயநிதி பிடிவாதக்காரர். கலைஞர் பிரச்சனையை மென்மையாக கையாள முயற்சிப்பார். உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக முயற்சிப்பார். கலைஞரிடம் காசு உள்ளே சென்றால் வெளியே வராது. உதயநிதியிடம் காரியம் சாதிக்க பணத்தை தண்ணீராக கரைப்பார்.

 

இவர் கலைஞருக்கு “நேர் எதிர்”
எண் 9 செவ்வாயை குறிக்கும். செவ்வாய் போர்க்காரன். பூமிக்காரன். இவனுக்கு தன் தைரியம் உண்டு. எவருக்கும் அச்சப்படமாட்டார். ஆனால் எண் 9க்கு எண் 2,4,7 எதிர் எண் ஆகும். சினிமாவிற்கு எண் 3,7,9 காரர்கள் அதிகமாக கோலோச்சுவார்கள். அதனால், உதயநிதியால் திரையில் கதாநாயகனாக ஜொலிக்க முடிந்தது. எண் 9க்கு இவரின் தந்தை மு.க.ஸ்டாலினின் பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் எண் 4. இது அவருக்கு எதிர் எண் ஆகும்.
மு.க.ஸ்டாலின் பிறந்த தேதி 1-3-1953 (1+3+1+9+5+3=22=2+2=4)
எண் 4க்கு எண் 9ஐ முடக்கச் செய்யும் அல்லது எண் 9 எண் 4ஐ முடக்கச் செய்யும். எண் 4 உடைய மு.க.ஸ்டாலின் பெயர் எண் 9 உடைய தன் சகோதரர் அழகரி (M.K.AZHAGIRI 4+2+1+7+5+1+3+1+2+1=27=2+7=9)ஐ தன் தந்தை மூலம் முடக்கி கட்சியை விட்டு வெளியேற்றுவார். அதேபோல் மு.க.ஸ்டாலின் எண் 4 உடைய இவர் எண் 9 உடைய தன் மகன் கட்சிக்கு வரவிடாமல் தடுப்பாரா அல்லது எண் 9 உடைய உதயநிதி ஸ்டாலின் ஔரங்கசிப் பாணியில் தன் தந்தையை முடக்கி அரியணை ஏறுவாரா? இதனை விதி முடிவு செய்யும்.

 

 

அதிமுகவில் இபிஎஸ்(EPS) பெயரை மாற்றினால் பலன் மாறும். ஆனால் பிறந்த தேதியிலே எதிர் எண் அமைந்து விட்ட இவர்கள் இருவரும் பெயர் மாற்றினாலும் பெரிய மாற்றம் ஏற்படாது.
உதயநிதி ஸ்டாலின் தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் ராஜதந்திரமாக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி செல்லுவார். அதே சமயம் எதிர்க்கும் எதிரியை எதிர்கொண்டு அடிக்கவும் தயங்கமாட்டார்.
இவரிடம் ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் தன்மை தெரியும். எண் 9 கே.என். நேருவுக்கு இராசியானது. எண் 9 எண் 2ல் பிறந்த மகேஷ் பொய்யாமொழிக்கு எதிர் எண் ஆகும். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டு எண் (27-11-1977) 2+7+1+1+1+9+7+7=35 = 3+5 = 8. இந்த எண் தகப்பனாரை முடக்கும் எண். ஆனால் மு.க. ஸ்டாலினுக்கு பெயரில் பாதிப்பு இல்லை.
எண் 8 சனி ஆகும். சனியை போல் நல்லவனும் இல்லை. கேட்டவனும் இல்லை. தன்னையே அழிக்க துடிக்கும் எண் அடுத்தவரையும் அழிக்கும் எண். பொதுவாக, எண் எட்டுக்காரர்கள் ஆட்சி செய்யும் நிலையில் மக்கள் மனதில் பதியும் ஏதாவது நல்ல திட்டமோ அல்லது மோசமான திட்டமோ ஏற்படும். எண் 8 காரர்கள் ஆட்சி செய்யும்போது கொலைகளம் உருவாகும். பெயர் எண் 8 உடைய வின்சென்ட் சர்ச்சில் காலத்தில் இரண்டாம் உலகப்போர் உருவாகியது.

 

 

Rashinee album
26ல் பிறந்த எண் 8 உடைய மன்மோகன் சிங் காலத்தில் இலங்கையில் இந்தியா ஆதரவுடன் போர்க்களம் உருவாகி இன அழிப்பு நடந்தது.
17ல் பிறந்த எண் 8 உடைய மோடிக்கு பேக்கரி எரிப்புக்கு களம் உருவாகி அதில் பல்லாயிரம் பேர் உயிர் இழந்தனர்.
17ல் பிறந்த எண் 8 உடைய எம்ஜிஆர்க்கு நக்சல் ஒழிப்பு, மண்டைக்காடு கலவரம் ஏற்பட களம் ஏற்பட்டது.
பெயர் எண் 6 உடைய உதயநிதி ஸ்டாலின் (TAMIL NADU = 4+1+4+1+3+5+1+4+6 = 29 2+9 = 2) தமிழ்நாட்டிற்கு ராசியான எண்காரர். தமிழகத்தை முதல்வராக ஐந்து ஆண்டு முழுமையாக ஆள்வதற்கு பிறந்த தேதி அல்லது பிறந்த தேதி மாதம் வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் அல்லது பெயரின் எண் 6,7,8 இருக்க வேண்டும். மற்றவர்கள் 6 மாதமோ அல்லது ஒருவருடம் அல்லது இரு வருடம் பதவி ஏற்கலாம். முழுதாய் ஐந்து வருடமும் 6,7,8 காரர்கள் பதவி ஏற்க முடியும்.
உதயநிதி பெயர் எண் 6 தண்ணீர் ராசியாகும். திமுகவில் தண்ணீர் ராசிக்காரர் மு.கருணாநிதி குடும்பத்தில் உதயநிதிக்கு மட்டும்தான் உள்ளது. இவர் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால்  ஜெ.ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட அடக்குமுறை ஆட்சி நடக்கும். நீர்நிலைகள் முக்கியத்துவம் பெறும். திமுக கட்சியில் பெரிய மாற்றம் வரும்.

 

எண் 6 சுக்கிரன். உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன். செத்தவனை உயிர்ப்பிக்க வைப்பவன். அதே போல் உதயநிதி திமுக தலைமைக்கு வந்தால் திமுகவில் கனவாகவே போன தொண்டர்கள் பதவி, அதிமுகவைப் போல் பெரும் பதவிக்கு வரும் யோகம் கிடைக்கும். திமுக ஒற்றை ஆளுமைக்கு கீழ் வரும் தனித்தனி மாவட்ட தலைவர்கள் கட்சித்தலைமையை மிரட்ட முடியாது.
உதயநிதி பெயர் எண் 6, எண் 2 உடைய மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவான எண். பெயர் எண் 5, பெயர் எண் 6 உடைய கே.என்.நேருவுக்கு எதிர் எண் ஆகும்.
10-11-1974இல் பிறந்த ஜெ.தீபா 1+0+1+1+1+9+7+4=6 பெயர் எண் 6 கூட்டு எண் 6 உடைய ஜெ.தீபா அதிமுகவில் சேராமல் இருக்கும் வரை அது உதயநிதிக்கு பெரிய வரப்பிரசாதம்.

 

தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னோ, ஆறுமாதத்திற்கு முன்னோ ஜெ.தீபா அதிமுகவில் சேர்ந்து கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்தால் அதிமுக மறுபடி விஸ்வரூபம் எடுக்கும். மோடியால் எதிர்க்க முடியாத மூன்று நபர்கள் சுப்பிரமணியன்சாமி, பிரயங்காகாந்தி, ஜெ.தீபா.
ஒருவனின் உடலைப் பார்த்தோ செயலைப் பார்த்தோ ஒருவனை தீர்மானிக்க முடியாது அவன் விதி மட்டுமே அதனை முடிவு செய்யும். உதயநிதிக்கு ஆட்சி அமைக்கும் யோகம் அமைந்தால் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா போல் எதிரி அரசியல் முடிவுக்கு வரும். அரசியல் ஆரோக்கியமாக மாறும்.
தொடரும்…

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.