திருச்சியில் TUJ வின் 17 வது மாநில மாநாடு  – ஒரு பார்வை

0
Business trichy

திருச்சியில் TUJ வின் 17 வது மாநில மாநாடு

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 17 வது மாநில மாநாடு,  22 – 06 – 2019 அன்று திருச்சி மாநகரில் நடைபெற்றது.

 

Image

மலேசியா டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் அவர்கள் முன்னிலையில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரஸ் கவுன்சில் உறுப்பினருமான தோழர் எஸ்.என்.சின்ஹா அவர்கள் சங்க கொடியேற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

 

சிறப்பு அழைப்பாளராக உலக தமிழ் பண்பாட்டு கழக இலங்கைத் தலைவர் மற்றும் தினகரன் மூத்த ஆசிரியருமான தோழர் தே.செந்தில் வேலவர் ( இலங்கை ) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

மாநாட்டிற்கு  அரங்கிற்கு மறைந்த மதுரை மாவட்டத் தலைவர் தோழர் டி.ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

 

மறைந்த தலைவர் பத்திரிகையாளர்களின் புரட்சியாளர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் படத்தை விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் உயர்திரு டாக்டர் H.V.ஹண்டே அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 

சிறப்பு அழைப்பாளர்களாக, கேரள பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் , அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் துணை தலைவருமான தோழர் வி.பி.ராஜன், புதுச்சேரி பத்திரிகையாளர் யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதி மகாராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தோழர் டி.எஸ்.ஆரைப் பற்றி நினைவாஞ்சலி உரையை குடும்பத்தின் சார்பில் திருமதி டி.எஸ்.விஜயகுமாரி அவர்களும், சங்கத்தின் சார்பில் “இந்து பத்திரிகை” தொழிலாளர்களின் முன்னாள் தலைவர் தோழர் இந்து இ.கோபால.ஜி அவர்களும் உரையாற்றினார்கள்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் M.அப்பாதுரை, ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் தோழர் எஸ்.ஏ.என்.வசீகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

அதைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மாண்புமிகு C.விஜயபாஸ்கர் அவர்கள் TUJ சங்க உறுப்பினர்களுக்கான பாலிசி பத்திரத்தை வழங்கினார்.

 

மேலும் “முழு உடல் பரிசோதனையை” TUJ சங்க அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் படத்தை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி அவர்களும் திறந்து வைத்து சிறப்புரை வழங்கினார்கள்.

 

அந்த சமயத்தில் TUJ மாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், “நல வாரியம்” அமைக்க வேண்டும், “தாலுக்கா அளவில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசின் சலுகைகள்” கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 

அந்த கோரிக்கைகளை முதல் அமைச்சர் அவர்களிடம் சொல்லி நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளிந்தனர்.

 

அமைச்சர் மாண்புமிகு வெல்லமண்டி நடராஜன் அவர்கள் பேசும் போது, “எம்.ஜி.ஆர் அவர்களின் தூண்டுதலால் துவங்கப்பட்ட இந்த சங்கம் 29 ஆண்டுகளைக் கடந்து, 30 வது ஆண்டில் அடி” எடுத்து வைக்கப்பட உள்ளது என்றும், 4000 உறுப்பினர்கள் கொண்ட ஒரே சங்கம் இந்த TUJ சங்கம்தான் என்று புகழாரம் சூட்டினார்.

 

மறைந்த தினமலர் பங்குதாரர் மற்றும் அச்சிட்டாளர் உயர்திரு ரா.ராகவன் அவர்களின் படத்தை அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் “செகரெட்ரி ஜெனரல் மற்றும் பிரஸ் கவுன்சில்” உறுப்பினர் தோழர் சபீனா இந்திரஜித் அவர்கள் திறந்து வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து மக்கள் போராளி மேதா பட்கர் சாதனையாளர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி எழுச்சியுரையாற்றினார்.

 

தொடர்ந்து அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புத் தலைவர் தோழர் பி.ஆர்.பாண்டியன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் தோழர் சுப.உதயகுமார், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.முத்து, தமிழ்நாடு சி.பி.எஸ்.சி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மாநிலச் செயலாளர் மற்றும் தேசியக் குழு உறுப்பினர் தோழர் கே.ஆர்.நந்தகுமார், தமிழ்நாடு உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைவர் தோழர் G.தாமோதரன், அமைப்புச் சாரா தொழிலாளர்களின் மாநிலத் தலைவர் தோழர் ராதாம்மா,ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

 

தொடர்ந்து தினத் தந்தியில் ” வரலாற்றுச் சுவடுகள் ” தொடர் எழுதிய தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தினத் தந்தியில் பணியாற்றிய ஐயா ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மேதா பட்கர் அவர்களால் வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.

 

கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் ப்ளோரன்ட் பெரேரா, ராஜ் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தோழர் P.மகேந்திரன், நமக்காக தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் தோழர் லி.ஷாநவாஸ்கான், நவீன நெற்றிக்கண் ஆசிரியர் தோழர் ஏ.எஸ்.மணி, மெகா தொலைக்காட்சி ” தமிழ் நதி ” L.V.ஆதவன் உட்பட பலர் விருது பெற்ற பத்திரிகையாளர்களை வாழ்த்தி பேசினார்கள்.

 

அடுத்த நிகழ்வாக கலைஞர் அவர்களின் படத்தை முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு கே.என்.நேரு அவர்கள் திறந்து வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து மருது மூவி மேக்கர்ஸ் ஜீவா பெரியசாமி தயாரிப்பில், தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் இயக்கத்தில் உருவாகும் ” கலைஞரின் கலையுலகப் பயணம் ” எனும் ஆவணப்படம் உயர்திரு கே.என்.நேரு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

 

Rashinee album

தோழர் மேதா பட்கர் அவர்களின் அனல் தெறிக்கும் உரை மாநாட்டை முழுமை அடையச் செய்தது.

 

மாநாட்டு சிறப்பு மலரை மக்கள் போராளி தோழர் மேதா பட்கர் அவர்கள் வெளியிட அனைத்து பிரபலங்களும் பெற்றுக் கொண்டனர்.

 

மாநாட்டு இறுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

2300 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு இந்த மாநாட்டை வெற்றி மாநாட்டாக நடத்திக் கொடுத்தனர்.

 

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

 

தீர்மானம் – 1

 

தமிழ்நாட்டில் சமீபத்தில் காலமான பத்திரிகையாளர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் இந்த மாநாடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

 

தீர்மானம் – 2

 

பத்திரிக்கையாளர்களின் நலம் வாரியம் என்பது பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு பணிவரன்முறை சேமநலநிதி முதலியவைகளை உள்ளடக்கியது. ஆகவே பல்வேறு மாநிலங்களில் பத்திரிக்கையாளர் நலம் வாரியம் அமைந்தது போல தமிழகத்திலும் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு முன்வந்து ஒரு பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைத்து பத்திரிக்கையாளர் நலம் காக்க முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாட்டின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

 

தீர்மானம் – 3

 

பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு சலுகை விலையில் வழங்கும் வீட்டுமனை திட்டம் பல மாவட்டங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. வீட்டுமனை திட்டத்தை மிகக் குறைந்த விலையில் பத்திரிக்கைகளுக்கு வழங்கி வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாட்டின் மூலம் கேட்டுக்கொள்கிறோம்

 

தீர்மானம் – 4

 

செய்திகள் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்கள் தங்களின் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது டோல்கேட்டில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் – 5

 

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தால், அவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் குடும்ப நல நிதியும், பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதிய நிதியும், பெரும்பாலான பாதிக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனுடைய விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதால் தமிழக அரசு குடும்ப நிதி, ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கும் பத்திரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து அவர்கள் குடும்பங்களுக்கு அந்த நிதிகள் சென்று சேருமாறு உதவ வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது

 

தீர்மானம் – 6

 

மாவட்ட ஆட்சியர் வழங்கும் செய்தியாளர் அடையாள அட்டை பஸ்பாஸ் இன்னும் பிற சலுகைகள் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த வருடம் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது, செய்தியாளர் அங்கீகார அட்டை பத்திரிக்கையாளர்களுக்கு  வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் 7

 

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதிய தொகை, குடும்ப நல நிதி , பத்திரிகையாளர்களின் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தமிழக அரசு அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது

 

தீர்மானம் – 8

 

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்தியன் ஜெர்னலிஸ்ட் யூனியனின் (IUJ) அங்கீகாரத்துடன்  செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்  ( Tamilnadu Union of Journalists ) ஏற்கனவே தமிழக அரசின் “அங்கீகார அட்டை” குழுவிலும், “ஓய்வூதிய குழுவிலும்” இடம் பெற்றிருந்தார்கள்.மீண்டும் தமிழ்நாடு அரசு செய்தி அங்கீகார குழுவிலும் ,ஓய்வூதிய குழுவிலும் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸட்  உறுப்பினர்கள் இடம்பெற ஆவண செய்யுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் – 9

 

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்  சங்கத்திற்காக தன்னலமில்லாமல் பாடுபட்டு வரும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்  அனைவருக்கும், சங்கத்தின் தூண்களாய் விளங்கிக் கொண்டிருக்கும் மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கும் இம்மாநாடு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

 

சார்லஸ் எஸ்.குணசேகரன்

மாநில செய்தி தொடர்பாளர் – டி.யூ.ஜே

Ukr

Leave A Reply

Your email address will not be published.