நின்றுபோன திருவிழா எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

0
1

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதி மதம் கடந்து ஒன்றாக சேர்ந்து கோயில் திருவிழாவை நடத்தியிருக்கின்றனர் சோழியவிளாகம் கிராமத்து மக்கள்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் ஒன்றியத்தின் கடைக்கோடி கிராமம் சோழியவிளாகம். அங்கு பிரசித்தி பெற்ற மகா,மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோயிலில் அனைத்து சமூக மக்களுக்கும் வழிபட்டுவந்தனர். அதோடு பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் இக்கோயிலின் குளதெய்வக்காரர்கள் இருக்கின்றனர், தினசரி பக்தர்கள் வந்தவன்னமாகவே இருப்பார்கள்.

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த சாமி வீதிவுலாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு சாமி வீதி உலா வராது என சிலர் பிரச்சனை செய்தனர். அப்போது இருந்த திருவிடைமருதூர் தாசில்தார் காமராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கம் போல் அனைத்து சமூகத்தவர் குடியிருப்பு பகுதிகளுக்கும் அம்மன் ஊர்வலம் போய்வர வேண்டும் என பேசி முடிக்கப்பட்டது.ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை தவிர மற்ற சமுகத்தில் உள்ள சிலர் பிடிவாதமாக மறுத்தனர். இதனால் எட்டு ஆண்டுகள் திருவிழா நடக்காமல் பூட்டியே கிடந்தது.

2

இந்த நிலையில் சோழியவிளாகத்தில் உள்ள வெங்கடேஷ் அய்யர், ஜீ,ஆர்,எஸ்,முரளி, நக்கீரன்செல்வகுமார், ரவி, செந்தில் டி,என்,இ,பி,பாலமுருகன், ஏ,சி,பண்ணீர்ச்செல்வம் உள்ளிட்ட முக்கிய நபர்கள் ஒன்றுகூடி சுமுகமாக பேசி சோழியவிளாகத்தின் நலன் கருதி அனைத்து சமுக மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் சுவாமி ஊர்வளம் கொண்டு செல்வது என முடிவெடுத்து திருவிழாவை மிக விமர்சையாக நடத்தி முடித்துள்ளனர்.

நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு அனைத்து சமுக மக்களும் ஒன்றுகூடி திருவிழா நடத்தியிருப்பது அப்பகுதியில் பெருமையாக பேசப்பட்டுவருகிறது.

இதுகுறித்து ஜீ,ஆர்,எஸ், முரளி கூறுகையில், ” சோழியவிளாகம் மற்ற கிரகங்களை விடமாறுபட்ட கிராமம். இங்கு சாதி மதம் எதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாக ஒரு தாய் பிள்ளைகளைப் போல வாழ்ந்துவந்தோம். ஒற்றுமையாக இருந்து வந்தோம். 8 ஆண்டுக்கு முன்பு ஒரு சிலரால் அசம்பாவிதம் நடந்துவிட்டது. அதை மறந்து, முறியடித்து, மீண்டும் கிராமத்தை ஒன்றாக்கி திருவிழாவை நடத்தி இருக்கிறோம். திருவிழாவில் அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம் செய்து கொண்டதோடு, அனைத்து சமுகத்தவர் குடியிருப்புகளுக்கும் ஊர்வளம் சென்றது. சாமி ஊர்வலத்தை மிக அருமையாக ஒற்றுமையாக நடத்தி முடித்திருக்கிறோம். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் குழுவாக செயல்பட்டு முடித்துள்ளோம். இனி தொடர்ந்து திருவிழா நடக்கும். வரும் ஆண்டுகளில் முன்பு நடந்ததைப்போல தீமிதி திருவிழாவும் நடக்கும்.” என்றார் பெருமையாக.

ஜெ.கே

3

Leave A Reply

Your email address will not be published.