திருச்சி எம். பி. பாராளுமன்றத்தில் திருச்சி க்காக முதல் கோரிக்கை

0

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து கல்ப் நாடுகள் மற்றும் உள்நாட்டு விமானநிலையங்களுக்கு நேரடி விமானசேவை உடனடி தேவை.
திருச்சிராப்பள்ளியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்கள் மத்தியஅரசிடம் தனது முதல் கோரிக்கையாக முன்வைப்பு.

சுதந்திர இந்தியாவின் 17வது நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு, குடியரசுத்தலைவர் உரை மற்றும் குடியரசுத்தலைவர் உரைக்கான நன்றிபகரல் நிகழ்வுகள் நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றன.

சந்தா 2

இதில்,
தமிழகத்தின் முன்னாள் காங்கிரஸ் மாநிலத்தலைவரும்,
திருச்சிராப்பள்ளியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,
மூத்த நாடாளுமன்றவாதியுமான (parliamentarian) திருநாவுக்கரசர் அவர்கள் மத்தியஅரசிடம் தனது கன்னி கோரிக்கையாக, “திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து கல்ப் நாடுகள் மற்றும் உள்நாட்டு விமானநிலையங்களுக்கு நேரடி விமானசேவை உடனடி தேவை” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

‌சந்தா 1

திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத்தில் நிறைய மத்தியஅரசு சார்ந்த கோரிக்கைகள் இருந்தாலும், முக்கியமான தேவையானது “திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கும் பிற கல்ப் விமானநிலையங்களுக்குமான நேரடி விமானசேவை” கோரிக்கையாகும். மத்தியஅரசானது எந்த ஒரு கல்ப் நாட்டை சார்ந்த விமானநிறுவனமும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு சேவை வழங்க அனுமதிக்கவில்லை. இந்தியாவின் விமானநிறுவனங்களும் இங்கிருந்து அதிமுக்கியத் தேவையுள்ள குவைத், தோஹா, ஜித்தா உள்ளிட்ட கல்ப் விமானநிலையங்களுக்கு நேரடி விமானச்சேவை வழங்க முன்வரவில்லை.
கிட்டத்தட்ட கால்நூற்றாண்டிற்கு மேல் உள்ள கோரிக்கையும் தேவையுமானது “திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து கல்ப் நாடுகளின் விமானநிலையங்களுக்கு நேரடி விமானசேவை” என்பதாகும்.
இதில் திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச்சார்ந்த கல்ப் நாடுகளில் பணிபுரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தேவை, அதிகரிக்கும் ஏற்றுமதி மூலம் நமது விவசாயிகளுக்கு கிடைக்கும் அண்ணியச் செலவாணிகள், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல நேர்மறை விளைவுகள் உள்ளடங்கி இருப்பதாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்களை இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC),
பஹ்ரைன் தமிழ்ச்சங்கம்,
அபுதாபி அய்மான் சங்கம்,
துபய் ஈமான் சங்கம் உள்ளிட்ட பல கல்ப் அமைப்புகள் நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தன்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்களும் இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் கருதி, மத்தியஅரசிடம் தனது கன்னி கோரிக்கையாக முன்வைத்துள்ளது மிகவும் பாராட்டப்படவேண்டிய நிகழ்வாகும்.

 

Leave A Reply

Your email address will not be published.