அரசுத்துறையை விற்பதற்கு அரசாங்கம் தேவையா?

0
1

 

அரசுத்துறையை விற்பதற்கு அரசாங்கம் தேவையா?

2
4

மத்திய அரசை கண்டித்து டிஆர்இயூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இரயில்வே துறையை தனியார்மயம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை, தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கினை கண்டித்தும் திருச்சி டிஆர்இயூ சங்கத்தினர் சார்பில் இன்று(27.6.2019) மத்திய இரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரயில்வே துறையை தனியார்மயம் செய்ய நினைக்கும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கினை கண்டித்து தென்னக இரயில்வே முழுவதும் கடந்த 4நாட்களாக தொடர்ந்து டிஆர்இயூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று(27.6.2019) திருச்சி மத்திய இரயில் நிலையத்தில், திருச்சி கோட்ட டிஆர்இயூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோட்ட தலைவர் எம்.எஸ். மொய்தீன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ். ரெங்கராஜன், டிஆர்இயூ பொதுச்செயலாளர் மேத்யூசிரியாக், உதவி பொதுச்செயலாளர் பி.கே.மாதவன், உதவி பொதுச்செயலாளர் டி.மனோகரன், கோட்டச்செயலாளர் ஜி. கண்ணன் மற்றும் கே. வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். டிஆர்இயூ உறுப்பினர்கள் மற்றும் பொதுக்கள் பலர் இதில் கலந்து கொண்டு, அரசுத்துறையை விற்பதற்கு அரசாங்கம் தேவையா? என முழக்கமிட்டனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.