திருச்சியில் கவரிங் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

0

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபு(34). இவரது மனைவி தர்ஷினி. பிரபு கடந்த 4 ஆண்டுகளாக திருச்சி மேலப்புலிவார்டு பகுதியில் வசித்து வந்தார்.

food

அப்பகுதியில் கவரிங் நகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

gif 4

Leave A Reply

Your email address will not be published.