தயார் ஆனா மருமகன்; தடுத்து நிறுத்தும் மாமனார் !

0
Business trichy

“எடப்பாடி ஆட்சியை கவிழ்த்தே ஆக வேண்டும் என தீவிரமாக பல்வேறு முயற்சிகளை செய்தது திமுக. அதிலும் குறிப்பாக சபரீசன் டீம் அதற்காகவே களமிறங்கி பல்வேறு வேலைகளைப் பார்த்தது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரை ரகசியமாக சந்தித்தும் பேசி வந்தார்கள். ஐந்து எம்.எல்.ஏ.க்கள் திமுக சொல்வதை கேட்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

 

இது எல்லாமே எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு நபர்கள் மூலமாக தகவலாக போய்க் கொண்டே இருந்தது. எம்.எல்.ஏ.க்கள் சிலரை திமுகவினர் அவர்கள் வீட்டுக்கே சென்று சந்தித்த தகவல்கள் ஆதாரங்களுடன் எடப்பாடிக்கு வந்து சேர்ந்தது. அதையெல்லாம் பார்த்துதான் அவர் கொந்தளித்துவிட்டாராம். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை அழைத்துப் பேசிய எடப்பாடி, ‘தேர்தலில் நம்மை தோற்கடிச்சு ஆட்சியை கலைக்க திட்டம் போட்டாங்க.

 

Rashinee album

அது நடக்கலை. அத்தோடு விட வேண்டியதுதானே.. இப்போ பாருங்க நம்ம எம்.எல்.ஏ.க்களை விடாமல் துரத்திட்டு இருக்காங்க.. இதை இப்படியே விடக் கூடாது’ என்றிருக்கிறார். இதையடுத்து, சமீபத்தில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த வேலுமணியும் தங்கமணியும், அமித்ஷா கொடுத்த ஐடியாக்களை எல்லாம் எடப்பாடியிடம் சொல்லி இருக்கிறார்கள்.
டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட ஐடியாவை செயல்படுத்தும் திட்டத்தில் தீவிரமாகி இருக்கிறார் எடப்பாடி. ‘திமுக தரப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் யார் பேசினாலும் அதை டேப் செய்யுமாறு உளவுத் துறைக்கு உத்தரவு போயிருக்கிறது.

 

Image

குறிப்பாக திமுக தரப்பில் இருந்து யாராவது அவர்களிடம் பேசினால் அதை உடனுக்குடன் கண்காணித்து ரிப்போர்ட் அனுப்புமாறும் சொல்லப்பட்டு இருக்கிறது. திமுக தரப்பில் இருந்து விரிக்கும் வலையில் பணம்தான் பேரம் பேசப்படுகிறது.
இதுவரை போனில் அப்படியான பேரத்தை யாரும் பேசவில்லை. நேரில்தான் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசி வருகிறார்கள். அப்படி யாராவது போனில் பேசினால் அந்த ஆதாரத்தை கையில் எடுத்து இன்கம் டேக்ஸ், சிபிஐ மூலம் திமுக தலைமையை குறிவைக்கலாம். அதன் பிறகு ஆட்சியை கலைக்கிறோம் என்று திமுக தரப்பில் இருந்து வாயே திறக்க மாட்டார்கள்.’

 

 

என்பதுதான் டெல்லியில் இருந்து கொடுத்த ஐடியா. அந்த ஆதாரங்களைப் பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் எடப்பாடி.
இதெல்லாம் அரசல் புரசலாக திமுக தரப்புக்கு தெரிய வந்திருக்கிறது. இனி ஆட்சி கலைப்பு தொடர்பாக யாரும் எதுவும் பேச வேண்டாம் என வாய் மொழி உத்தரவு போட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.
அரவக்குறிச்சி தொகுதியில் நன்றி அறிவிப்பை முடித்துவிட்டு வந்த ஸ்டாலினிடம், ஆட்சியை கலைப்பது தொடர்பாக சபரீசன் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதற்கு, ‘இப்போதைக்கு எதுவும் வேண்டாம்’ என ஒற்றை வரியில் சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்.”

Ukr

Leave A Reply

Your email address will not be published.