கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!

0
Business trichy

இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று   ( ஆனி 11, 2050 / 26.06.2019)  காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர்  உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். இவரது பரிபாடல்,மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலித்தொகை, சூளாமணி, குண்டலகேசி, வளையாபதி   ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்ற சிறப்பான நூல்களுள் சிலவாகும்.

web designer

இவரது பாடல்கள் பி.சுசிலா போன்ற இசைவாணர்கள் குரலில்இசைப்பேழைகளாகவும் வந்துள்ளன.

loan point

தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்புத் திறனாய்வு நூலைத் தாம் வட்டார வளர்ச்சி அலுவராக இருந்த பொழுதும் அன்றாடம் தட்டச்சிட்டுக் கொடுத்த செயலை மறக்க முடியாது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.