பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ‘தில்லை பெட்ஸ்’

0
Business trichy

செல்லப்பிராணிகள் என்ற உடனேயே நமது மனதில் ஒர் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். பறவைகள், நாய்கள், பூனைகள், மீன் வகைகள் ஆகியவற்றை பார்த்த உடன் அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க வேண்டும் என்ற ஆவல் நம் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றும் அவ்வாறு தோன்றும் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக 2003 ஆம் ஆண்டு தோன்றிய நிறுவனம் தான் தில்லை பெட்ஸ் என்ற நிறுவனம்.


இங்கு விற்கப்படும் அனைத்து உயிரினங்களும் தில்லை பெட்ஸ் நிறுவனத்தாரால் நன்கு பராமரிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் அதற்கு தேவையான தடுப்பூசிகளும் போடப்பட்டு அந்த உயிரினங்கள் விற்கப்படும் வரை மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் பாதுகாப்பாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் செல்லப்பிராணிகள் வாங்க நினைப்பவர்களின் தவிர்க்க முடியாத தேர்வாக இருப்பது ‘தில்லை பெட்ஸ்’ நிறுவனம் தான் என்பதை மறுப்பதற்கு இயலாது.

இங்கு பறவைகள், மீன்கள், நாய்கள் போன்ற உயிரினங்களும் அவற்றிற்கு தேவைப்படும் அனைத்து வகையான உணவு வகைகள் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் ஓரே இடத்தில் கிடைப்பது இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.
மேலும் உயிரினங்களின் மருத்துவத்திற்கும் இந்நிறுவனம் தில்லை கிளினிக் என்ற ஒன்றை நிறுவி கை தேர்ந்த மருத்துவரை கொண்டு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கு வெளிநாட்டு நாய் வகைகள் மட்டுமின்றி நம் இந்திய நாட்டு நாய் வகைகளும் விற்கப்படுகிறது. வயதானவர்களுக்கு நாய் போன்றதொரு சிறந்த பாதுகாப்பான பிராணியாக வேறு எதுவும் இருக்க முடியாது. அவற்றை எப்படி வளர்க்க வேண்டும், அவைகளுக்கு எந்த வகையான உணவுகளை கொடுக்க வேண்டும் போன்ற பல விபரங்களை தில்லை பெட்ஸ் நிறுவனத்தார் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சொல்லி தருகின்றனர்.

 

loan point
web designer


பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களையும் உற்சாகப்படுத்தி அவர்களின் தனிமை உணர்வை அகற்றி உற்ற நண்பனாய், உறவாக இருக்கும் இந்த செல்லப்பிராணிகளை தில்லை பெட்ஸ் நிறுவனத்தில் வாங்கி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெளியூர் செல்ல நேரும் போது அந்த வாடிக்கையாளர்களின் செல்லப்பிராணிகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழ்நிலையில் இந்நிறுவனத்திற்கு தகவல் தந்தாலே போதுமானது வெளியூரிலிருந்து அந்த வாடிக்கையாளர்கள் வரும் வரை அவர்களின் பெட்ஸ்களை கவனித்து கொள்வதை சேவை நோக்கோடு செய்து வருகின்றனர்.

nammalvar

தற்போது மூன்று கிளைகளை வெற்றிகரமாக நடத்தி கொண்டு வரும் இந்நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வியப்பூட்டும் வகையில் தனது அடுத்த கிளையை மிக விரைவில் தொடங்க உள்ளது.
என்ன வாசகர்களே கிளம்பிவிட்டீர்களா? தில்லை பெட்ஸ் நிறுவனத்தில் உங்கள் செல்லப்பிராணிகளை வாங்குவதற்கு?

IAS academy

Leave A Reply

Your email address will not be published.