சமூக நீதி அரசன் விபி. சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

இந்திய வரலாற்றில் உயர் சாதிகளுக்கு சலுகைகள், தானங்கள் வழங்கிய மன்னர்கள் தான் அதிகம். எந்த ஒரு மன்னரும் (குறிப்பாக நம்ம ஊரில்) சூத்திரர்களின் கல்விக்காகவோ, வேலை வாய்ப்பிற்காகவோ, பொருளாதார வளர்ச்சிக்காகவோ ஆட்சி நடத்தியதாக தெரியவில்லை. ஆனால், சுதந்திர இந்தியாவில் ஒரு பிரதமர் (சாதியால் அவர் ஒரு ராஜபுத்திரர், அதாவது மன்னர்கள் சாதி) தான் சூத்திரர்கள் கல்விக்காகவும் வளர்ச்சிக்காகவும் சிந்தித்தார். அவர்களின் மேம்பாட்டிற்காக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இந்த முடிவால் அவரது ஆட்சியை உயர் சாதி வெறியர்கள் கலைத்து விடுவார்கள் என்பதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மகாத்மா பூலே போன்ற தலைவர்களின் வழியில் பயணித்து “சமூக நீதி” அரசியலில் ஒரு மகத்தான இடத்தை பிடித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து இந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வைத்த மாநிலம் தமிழகம். செய்தவர்கள் திராவிட இயக்கங்கள்!

சமூக நீதி அரசன் விபி. சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
R. ராஜ ராஜன்
