சமயபுரம் திருக்கோயிலில் மொட்டை அடிக்கும் பக்தர்களுக்கே மொட்டை அடிக்கும் இந்து அறநிலை துறை அதிகாரிகள்!

0
1 full

சமயபுரம் திருக்கோயிலில் மொட்டை அடிக்கும் பக்தர்களுக்கே மொட்டை அடிக்கும் இந்து அறநிலை துறை அதிகாரிகள்!

மொட்டை அடிக்கும் மண்டபத்தில் ரூபாய் முப்பதுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது அதற்கு ஒரு பிளேடு ஒரு சந்தன வில்லை தரப்படுகிறது அந்த டோக்கனை மாடியில் கொண்டு முடி திருத்தும் நபரிடம் கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டு மொட்டை அடித்து விடுகிறார் மேலும் மொட்டையடித்து முடிந்த பிறகு அனைத்து பக்தர்களிடம் சராசரியாக ஒரு மொட்டைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் பக்தர்களிடம் மிரட்டி கேட்கிறார்கள். ஆனால் அந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள led டிவியிலோ மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ( இனாம் )எதுவும் தரவேண்டாம் என்று அறிவிப்பு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது ஆனால் மொட்டை அடிக்கும் நபரோ சராசரியாக ஒரு மொட்டைக்கு 50 ரூபாய் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பக்தர்களிடமிருந்து வசூல் செய்கிறார்கள் அவர்களுக்கு டோக்கன் வாங்கும் 30 ரூபாயில் ஒரு மொட்டைக்கு 25 ரூபாய் சம்பள வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பாக எல்இடி டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இருப்பினும் அவர்கள் அனைத்து மொட்டை அடிக்க வரும் பக்தர்களிடமும் ரூபாய் 50 மிரட்டி வாங்கிக் கொள்கிறார்கள் 200க்கும் மேற்பட்ட மொட்டையடிக்கும் நபர்கள் கோயில் நிர்வாகத்தால் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு சராசரி ஒரு நபருக்கு ஒரு நாள் ஒன்றுக்கு 100 மொட்டை என்ற விகிதத்தில் வழங்கப்பட்டால் கூட 2500 ரூபாய் அவர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு சம்பளம் கிடைக்கும் மேலும் ஒவ்வொரு பக்தர்களிடமும் மொட்டை அடிப்பதற்கு 50 ரூபாய் மிரட்டி பெறும் போது அதில் ஒரு 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வருமானம் வரும் ஆகமொத்தம் கூட்டிப் பார்த்தால் மொட்டை அடிக்கும் நபருக்கு சராசரியாக நாளொன்றுக்கு 7,500 ரூபாய் வருவாய் உள்ளது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 2.25 லட்சம் ரூபாய் அவர்களுடைய வருவாய் மொட்டை அடிக்கும் நபருக்கு கிடைக்கப் பெறுகிறார்கள் இருப்பினும் இது சம்பந்தமாக மொட்டை அடிக்கும் நபரிடம் கேட்டபோது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சராசரியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் எங்களுக்கு 25 ரூபாய் கொடுத்து விடுங்கள் நீங்கள் மீதம் 25 ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறார்கள் அதன் காரணமாகவே நாங்கள் மொட்டை அடிக்க வரும் பக்தர்களிடம் சராசரியாக 50 ரூபாய் வாங்க வேண்டி உள்ளது என்று மொட்டை அடிக்கும் நபர் கூறுகிறார் மேலும் மொட்டை அடிக்க வரும் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

3 half

Leave A Reply

Your email address will not be published.