திருச்சியில் ஆச்சரியம்!-82,000 பழைய பஸ் டிக்கெட்டுகள்

0
Full Page

திருச்சியில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி 2019 ஜீன் 14, 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள் வரலாற்றினை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு, துட்டு , மணி என பணத்தின் பரிமாண வளர்ச்சியினை உலகப் பணத்தாள்கள் , நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழம் பொருட்கள் கண்காட்சி மூலம் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அங்கே காட்சிபடுத்தினார்கள்.
இதில் குறிப்பாக 1945ஆம் ஆண்டு பேருந்து பயணச்சீட்டு உட்பட சுமார் 400 வெவ்வேறு பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி நோட்டபிளி சொசைட்டி சார்பில் ஸ்டாம்புகள், விதவிதமான கைக்கடிகாரங்கள், ரூபாய் நோட்டுகள் போன்றவற்றுக்கான 3 நாள் கண்காட்சி திருச்சி னிவாசா அரங்கில் நடைபெற்றது.
திருச்சி புதூரைச் சேர்ந்த எஸ்.சுவாமி நாதன் என்பவர், இக்கண்காட்சியில் 400 வகையான பேருந்து பயணச்சீட்டுகளைக் காட்சிப்படுத்தியுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த ராமவிலாஸ் பஸ் சர்வீஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு இவற்றில் மிகப்பழமையானது. இந்த பயணச்சீட்டு 1945ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் இயங்கிய டிவிஎஸ் சதர்ன் ரோட்வேஸ் உட்படப் பிரபலமான பல பேருந்து நிறுவனங்கள் வழங்கிய பயணச்சீட்டுகள் இவரிடம் உள்ளன.
“என்னிடம் மொத்தமாக 82,000 பஸ் டிக்கெட்டுகள் உள்ளன. அவற்றில் 400ஐ மட்டுமே காட்சிப்படுத்திப்படுத்தியுள்ளேன். பிரிண்ட் செய்யப்பட்டவை, கையால் எழுதிக்கொடுக்கப்பட்டவை என்று பல வகை பயணச்சீட்டுகள் என்னிடம் உள்ளன. சேரன், பாண்டியன், பல்லவன், அண்ணா போக்குவரத்துக்கழகம் சார்ந்த அனைத்து பேருந்து பயணச்சீட்டுகளும் உள்ளன” என்று சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எஸ்.சுவாமிநாதன் கண்காட்சியில் காட்சிபடுத்தியுள்ளதை பாராட்டி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், சான்றிதழ் வழங்கினார். செயலர் குணசேகர், பொருளாளர் அப்துல்அஜீஸ், முகமது சுபேர், பாண்டி, கமலக்கண்ணன், சந்திரசேகரன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.