
மனதின் சமநிலை
எண்ணங்களின் அமைதி
மனம் சமநிலையில் இருக்கும் பொழுது எண்ணங்கள் அசைவின்றி அமைதியுடன் காணப்படுகிறது
அதனை பணிவுடன் யோகியரிடம் “ஐயனே, நம்முடைய மனதினால் தான் நமக்கு இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் நேருகின்றது. இதனையே கணியன் பூங்குன்றனார், ” தீதும் நன்றும் பிறர் தர வாரா” என உறைத்துள்ளார். இருப்பினும், இவ்வாறு நாம் எப்போதும் நன்மையை மட்டுமே எண்ண முடியும். மனதில் தீய எண்ணங்களும் தோன்றவே செய்கின்றன. இவை எதனால் தோன்றுகின்றன தீயவற்றை தவிர்க்கும் உபாயம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்” என கேட்கலானான்.

அதற்கு யோகியார் “மன்னா நம்முடைய மனதில் மூன்று ஆற்றல் நிலைகள் உள்ளன அவை கீழ்நிலை, சமநிலை மற்றும் மேல்நிலை என வகைப்படும். நம்முடைய மனம் கீழ் ஆற்றல் நிலையில் இருக்கும் பொழுது நம் மனதில் பொறாமை, வஞ்சனை, கோபம், துக்கம் போன்ற கீழான உணர்வுகள் தோன்றி அது சார்ந்த எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. நம்முடைய மனம் சமநிலையில் இருக்கும் பொழுது நம் மனதில் எந்தவித எண்ணங்களும் இல்லாமல் அசைவின்றி அமைதியுடன் எண்ணங்களற்று திகழ்கின்றது. அதே மனம் மேல்நிலை ஆற்றலில் இருக்கும் பொழுது சந்தோஷம், நன்றியுணர்ச்சி, தன்னிறைவு போன்ற உயர்ந்த உணர்வுகளை தோற்றுவித்து அது சார்ந்த எண்ணங்களை ஏற்படுகின்றன. கீழான நிலையில் இருக்கக்கூடிய மனமே தீய எண்ணங்களுக்கு வழிவகுக்கின்றது.
இதனை சமநிலைப்படுத்த இந்த நிலைக்கான பொறுப்பை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு என்கின்ற உணர்வை இறைவனிடம் செலுத்தி, பக்தியுடனும், பணிவுடனும், முழுமனதோடு இறைவனிடம் மன்னிப்பை நாட வேண்டும். இவ்வாறு மன்னிப்பு கேட்கும் பொழுது, நம்முடைய மனம் இயல்பாகவே சமநிலைக்கு வந்து விடுகின்றது. யோக சாதனை செய்ய விரும்புபவர்கள், இந்த சமநிலையில் தங்களுடைய யோக சாதனையை தொடரலாம். மற்றவர்கள் தங்களுடைய மனதின் ஆற்றல் நிலையை மேல் நிலைக்கு கொண்டுவர, தமக்கு இறைவன் அளித்துள்ள அனைத்து நன்மைகளையும் எண்ணிப் பார்த்து அவற்றுக்கு நன்றி கூறி, தம் நன்றி உணர்வை இறைவனிடம் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நன்றி உணர்வை வெளிப்படுத்தும் பொழுது மனம் மேல்நிலை ஆற்றலை அடைகின்றது. இவ்வாறு ஒரு நாளைக்கு பலமுறை தங்களுடைய மனதின் நிலையை கண்களை மூடி ஆராய்ந்து பார்த்து மேல்நிலைக்கு கொண்டுவரும்பொழுது மனம் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் திகழ்ந்து நன்மையையே விளைவிக்கும்” என விடையளித்துவிட்டு, மறுநாள் காலை அனைவரையும் மீண்டும் அதே முற்றத்தில் குழுமுமாறு கூறினார். அப்போது அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
