அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்கத்தான் வந்திருக்கின்றேன்:விஜயபிரபாகரன்

0

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உசிலம்பட்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

food

விஜயகாந்த் தலைகுனிந்தாலும் தனது கட்சியையும், தொண்டர்களையும் தலைகுனிய விடமாட்டார். இதை அவரே கூறியிருக்கிறார். இப்போது சொத்தில் பிரச்சினை வந்திருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஊழல் செய்த சொத்தில் பிரச்சினை இல்லை. உழைத்த பணத்தை வங்கியில் அடமானம் வைத்து, மாணவர்களுக்காக கல்வி சேவை செய்து, அதனால் சில பிரச்சினை வந்தது. இதை நாங்கள் கண்டிப்பாக நிவர்த்தி செய்துவிடுவோம்.

நான் அரசியலுக்கு வந்தது வாரிசு அரசியல் என்கிறார்கள் சிலர். தே.மு.தி.க. உற்சாகமாக இருந்த நேரத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. ஒரு சோதனை காலத்தில் தான் வந்துள்ளேன். அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்கத்தான் வந்திருக்கின்றேன். வரும் 2020-ம் ஆண்டு தை மாதம் மீண்டும் கம்பீரக்குரலில் விஜயகாந்த் வருவார் என்றார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.