ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடந்து முடிந்த மாணவர் பேரவை தேர்தல்

0
Full Page

செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்ப் பேரவைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. தேர்தல் அன்று காலை விரும்பிய மாணாக்கர்கள் வேட்பு மனுக்களை துணை முதல்வர்களிடம் தாக்கல் செய்தார்கள். தேர்தல் விதியின் படி போட்டியிட்ட மாணவர்கள் அறிவியல் பிரிவில் 60 சதமும் கலைப் பிரிவில் 55 சதமும் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் போதுமான வருகைப்பதிவு இருத்தல் அவசியம்.தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் குழுவினர் வேட்பு மனுக்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.

Half page

தகுதி பெற்ற வேட்பாளர்கள் மாணவர் பிரதிநிதிகளாக அவரவர் வகுப்பில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்று, வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ந்திடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகளை தேர்தல் அலுவலர்களாகப் பணியாற்றிய பேராசிரியர்கள் மாணவர் பேரவைத் தலைவர்கள் தேர்தல் நடைபெறும் அரங்கிற்கு அழைத்து வந்தார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர் பிரதிநிதிகளில் இறுதி ஆண்டு மாணவர்களால் தலைவர் மற்றும் இதர பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு தேர்தல் நடை பெற்றது. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகளை கல்லூரி முதல்வர் முனைவர். ஆரோக்யசாமி சேவியர், கல்லூரி செயலர் முனைவர் பீட்டர் சேவியர் முன்னிலையில் அறிவித்தார்.

முடிவுகளின் படி வணிகவியல் பயிலும் யுவராஜ் தலைவராகவும், புள்ளியியல் மாணவர் அகஸ்டோ அபினாஸ், வரலாற்று மாணவர் தமிழரசன் மற்றும் கணிப்பொறி மாணவர் சாம் பேனடிக்ட் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், கணிப்பொறி பயன்பாட்டியல் மாணவர் கிளின்டன், முதுகலை ஆங்கில மாணவி திவ்யா, முதுகலை வணிகம் பயிலும் அருண் மற்றும் முதுகலை இயற்பியல் பயிலும் சகாய ஜெனிஃபா ஆகியோர் செயலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். துணை முதல்வர் முனைவர் அருள் தாஸ் மேற்பார்வையில் புலத் தலைவர்கள் முனைவர் ரவி, முனைவர் பெஸ்கி மற்றும் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விமல் ஜெரால்டு ஆகியோரின் ஒருங்கிணைப்பில், பேராசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக பணியாற்றினார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.