உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்-கே.என்.நேரு

0

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்கிக் கொண்டு இருக்க முடியும் என்று திமுக மூத்த தலைவரும், திருச்சி மேற்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என். நேரு கொளுத்திப் போட்டுள்ளார். இவரது பேச்சு திமுக தலைவரின் பேச்சு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் பிரச்னையை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசினார். அப்போது, ”தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்கிக் கொண்டு இருக்க முடியும். மூன்று போக தண்ணீரை வீணாக கடலில் கலக்கச் செய்தவர்கள் அதிமுகவினர்” என்று காட்டமாக கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தமிழகத்தில் கூட்டணி அமைத்து திமுக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு பாண்டிச்சேரி உள்பட 10 இடங்களை அள்ளிக் கொடுத்தது. ஒரே இடத்தில் தேனி தவிர 9 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்து திமுக தேர்தல் பிரச்சாரம் செய்தது. ஆனால், தேசிய அளவில் காங்கிரஸ் பெரிய தோல்வியைத் தழுவியது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலை இருந்தபோதே 282 இடங்களில்தான் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை அலை இல்லாதபோதும் தனித்தே 303 இடங்களில் வெற்றி பெற்று தனித்தே ஆட்சி அமைத்தனர்.

இந்த படுதோல்வியில் இருந்து காங்கிரஸ் இன்னும் மீளவில்லை. தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் இருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். அடுத்த தலைவர் கட்சிதான் தேர்வு செய்ய வேண்டும். தான் செய்யப் போவதில்லை என்று அறிவித்தார்.

food

இந்த நிலையில் ஏற்கனவே கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை கொடுத்து இருக்கக் கூடாது என்று திமுகவில் புகைச்சல் கிளம்பியது. ஆனால், மத்தியில் பாஜகவுக்கு எதிராக அலை இருப்பதாகக் கருதியும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையிலும் அதிக இடங்களை திமுக விட்டுக் கொடுத்தது. ஆனால், அனைத்தும் தவறாக முடிந்தது.

இவற்றுக்கும் மேல், கன்னியாகுமரியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றார். இங்கு வெற்றி பெற்றதையடுத்து, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை வசந்த குமார் ராஜினாமா செய்தார். அந்த தொகுதி காலியிடம் ஆனது. இதையடுத்து, பேட்டியளித்த வசந்த குமார், ”தொடர்ந்து வெற்றி பெறும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடும்” என்றார்.

இதைத் தொடர்ந்து திருச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”நாங்குநேரியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும். கடந்த முறை விட இந்த முறை அந்த தொகுதியில் கூடுதலாக 30,000 வாக்குகள் கிடைத்துள்ளது. திமுக எளிதில் வெற்றி பெறும்” என்று தெரிவித்து இருந்தார்.

இதுவும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் கசப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வெற்றிக்கு திமுகவின் வாக்கும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

gif 4

Leave A Reply

Your email address will not be published.