அஜித் ரசிகனான நான் விஜய் ரசிகனாக மாற காரணம்!

0

விஜய்யை நினைத்து நான் மெர்சலான காரணங்கள்

மெர்சல் – 1

நீண்ண்ண்ட வருட அஜித் ஃபேனான எனக்கு விஜய்யை முதன்முதலாக எப்போது பிடிக்க ஆரம்பித்ததென்றால், மோடியின் செல்லாக்காசு நடவடிக்கையால் ஏழை மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு பாஜகவை மெர்சலாக்கியபோது

மெர்சல் -2

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் கொலை… கல்விக்கொள்ளைக்கு எதிராக தொடர்புபடுத்தி பைரவா படத்தில் உண்மைக்கு நெருக்கமாக நடித்தபோது

மெர்சல் -3

முழுமையாக பிடித்துப்போனது எப்போதென்றால், நீட் தேர்வால் படுகொலை செய்யப்பட்ட அனிதா குடும்பத்தினரை அண்ணனாக சந்தித்து ஆறுதல் கூறியதுபோது. இதற்காக விஜய்யை எப்போதும் பாராட்டிக்கொண்டிருப்பேன். விஜய்யை நினைத்து பெருமைப்படுவேன்

food

மெர்சல் – 4

மெர்சலில் ஜி.எஸ்.டியை எதிர்த்துப் பேசி ஆளும் பாஜகவை மிரள வைத்த துணிச்சல் எந்த முன்னணி நடிகருக்கும் வராதது

மெர்சல் 5

ஆளும் கட்சியின் தவறுகளை ஆட்சியில் இருக்கும்போதே சுட்டிக்காட்டி நடிப்பது என்பதுதான் உண்மையான ஹீரோயிஸம். அதுவும், ஜாமண்டரி பாக்ஸ் பிரச்சனைக்கெல்லாம் ஜட்ஜை கூப்பிடுற மாதிரி எதிர்த்துப் பேசினாலே எல்லாத்துக்கும் ரெய்டு அனுப்பி பணிய வைக்கும் பாஜகவை மெர்சலில் பஞ்சர் பண்ணியது

மெர்சல் 6

ஸ்டெர்லைட் போராளிகளை படுகொலை செய்த அரசுக்கு ஆதரவாக பேசியதோடு போராளிகளையும் கொச்சைப்படுத்தினார் ரஜினி. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல்கூறி ‘அழகிய தமிழ் மகன்’ என்பதை நிரூபித்தார் விஜய்

நாளுக்குநாள் வியப்பூட்டுகிறார் விஜய் அதிகமாக பிடிக்க ஆரம்பித்துவிட்டது அஜித் மட்டுமல்ல; இப்போது விஜய் ஃபேனாகவும் மாறிவிட்டேன்

– வினி சர்பனா

gif 4

Leave A Reply

Your email address will not be published.