இன்று பன்னாட்டு யோகா நாள்

0
Business trichy

யோகக்கலையின் தாயகமான நமது பாரதத்தில் பல யோகிகளும், சித்தர்களும் வாழ்ந்தனர், வாழ்ந்து வருகின்றனர், வாழ்வர். காலத்தினால் அழிக்கமுடியாத ஒரு கலை. நம் மூச்சில் கலந்த கலை. இதனை ஒவ்வொருவரும் உணரவேண்டும். நீங்கள் எந்த சாதியினரோ, மதத்தவரோ, ஏழையோ, பணக்காரரோ எதுவும் தேவையில்லை. யோகா கற்றிருந்தால் நீங்கள் நினைத்ததை அடையலாம். அது பணமாகட்டும். உடல் வலிமையாகட்டும் எதுவாயிருந்தாலும் உங்களால் சாதிக்க முடியும். அந்த தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் நமக்கு தருவது யோகா. இதனால் நீங்கள் அடுத்தவர்கள் மெச்சும்படி வாழலாம். அனைத்தும் யோகாவில் அடக்கம்.

அதற்காக ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.

MDMK

2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை ‘பன்னாட்டு யோகா நாளாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

Kavi furniture

முதல் சர்வதேச யோகா தினம்

முதல்முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.