தேவையில்லாத திமுக புதிய குழு

0
1

நடந்து முடிந்த மினி சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் திமுக 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 9 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக, ஆட்சி அமைக்கத் தேவையான அளவு உறுப்பினர்களைப் பெற்றதால், அரசு, மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறது.
9 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய திமுக தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அதற்கான அறிவிப்பு (ஜூன் 16) கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் வெளியாகியிருக்கிறது.

தலைமைக் கழக சட்ட ஆலோசகர்
என்.ஆர். இளங்கோ தலைமையில், மொத்தம் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி சாத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரான இ.கருணாநிதி, தலைமைக் கழக வழக்கறிஞர் வி. அருண் ஆகியோர் ஆய்வு செய்கிறார்கள். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, வழக்கறிஞர் நீலகண்டன் ஆய்வு செய்கிறார்கள்.

 

2

மானாமதுரை, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் பரந்தாமன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பரமக்குடி, சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசனும், வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவும் தோல்வி பற்றி ஆராய்கிறார்கள்.

இந்தக் குழுவின் ஆய்வினை எப்போது தொடங்க வேண்டும் ஆய்வுக்கான காலக்கெடு என்ன என்பது பற்றி பிறகு அறிவிப்பதாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஏற்கனவே வெவ்வேறு சூழல்களில் தலைமை பல குழுக்கள் அமைத்து, அந்தக் குழுக்களிடம் நிர்வாகிகள் பல புகார்கள் கொடுத்தும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்தக்குழு அமைக்கப்பட்டிருப்பது தேவையில்லையே” என்கின்றனர் திமுக தொண்டர்கள்.

ஆனால் இந்த ஒன்பது தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்களில் சிலர், ‘ஆரம்பிச்சாட்டாங்களா… தோத்துப் போன பின்னாடி ஆய்வு பண்ணி என்ன பண்ணப் போறாங்க? என அதிருப்தியை வெளிப்படையாகவே பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.