விஜய் 63 ரகசியம் !

0
full

ரசிகர்களின் பொறுமையைக் கொடுமையாய் இழக்க வைத்துள்ளது ‘தளபதி 63’ திரைப்படம். படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெயிலர், ரிலீஸ் தேதி என எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், ஆர்வமிகுதியால் பொறுமையை இழந்த ரசிகர்கள், நடிகர் விஜய் நடித்து வரும் ‘விஜய் 63’ திரைப்படத்தின் அப்டேட் பற்றி அந்த திரைப்படம் சார்ந்த பலரிடமும் கேட்டு வருகின்றனர்.

அட்லி-விஜய் கூட்டணியில் , தெறி, மெர்சல் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஜய் 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய்க்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்க ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கதிர், யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிகா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ukr

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள விஜய் 63 திரைப்படம் குறித்து இதன் தயாரிப்பாளரனான அர்ச்சனா கல்பாத்தியிடமே இது குறித்து ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு பதிலளித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தளபதி 63’ அப்டேட் சரியான நேரத்தில் வரும். உங்களது எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தீவிரமாக வேலை செய்து வருகிறோம்’ என அவர் டிவீட் செய்துள்ளார்.

poster

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘விஜய் 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலானது.

half 1

Leave A Reply

Your email address will not be published.