பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம்

0
D1

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தின்போது போலீசார் தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் வசதி ஏற்படுத்த இயலாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி விடுமுறை விட வேண்டும்.

D2

இரு மொழி கொள்கை

N2

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கையை கைவிட்டு இரு மொழி கொள்கையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும். இதுபற்றி கருத்து தெரிவிக்க 3 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். 9, 10-ம் வகுப்புகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்களையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 பட்டதாரி ஆசிரியர்களையும் கற்பித்தல் பணிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உள்ள 17 பி மற்றும் போலீசாரால் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கையானது அரசு நிதியில் நடைபெறுவதை தவிர்த்து அந்நிதியை ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பள்ளிக்கு வழங்க வேண்டும்.

பணி வரன்முறை

2004-06-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தினை பணி வரன்முறை செய்திட வேண்டும். சமூக அறிவியல் பாடத்திற்கு 7 பாடவேளை என்பதை மாணவர்களின் நலன் கருதி நடப்பு கல்வியாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் ஜான் உபால்ட் உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.