திருச்சியில் 18 வயதுக்குட்பட்ட 509 பேர் கர்ப்பிணி சிறுமிகள் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !

0
1

திருச்சி கோவிலுக்குள் குழந்தை திருமணங்கள் கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்.

பெருகி வரும் குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்டந்தோறும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து தடுத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் திருச்சியில் உள்ள சில முக்கிய  கோவிலில் திருட்டு திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், அவற்றில் பெருமளவு குழந்தை திருமணம் நடைபெறுவதாகவும் தெரியவருகிறது. இருப்பினும் கோவில் நிர்வாகமோ, அதற்குரிய அதிகாரிகளோ அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

2

திருச்சியில் பக்தியின் அடையாளமாக கூறப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோவில், இங்கு திருச்சி மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல பகுதியிலிருந்து பலகோடி பக்தர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்வது வழக்கம்.

அப்படியிருக்கையில் சமீபகாலமாக கோவிலுக்குள் முறைமீறி  திருமணங்கள் நடைப்பெற்று வருவதாகவும் அவையனைத்தும்  எந்தவித ரசீதோ, அல்லது சான்றிதழ் சரிபார்ப்போ எதுவும் செய்யாமல் கோவிலுக்குள் திருமணம் செய்ய கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் அங்கு உள்ள பூசாரிகள் துணையோடு நடப்பதாவும் இதை கோவில் நிர்வாகம் முறையாக கண்காணிக்க வில்லை என்கிறார்கள்  திருமணம் செய்ய வருபவர்களிடம் கோவிலுக்குள் செல்ல மட்டும் பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே விட்டு விடுகின்றனர்.

இது போன்றே முகூர்த்த நாட்களில் சுமார் 500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் அதிக அளவு குழந்தை திருமணங்கள் என்கிறார்கள். இக்குழந்தை திருமணங்கள் செய்ய வருவோர்  திருச்சியின் புறநகர் பகுதிகளான  துறையூர், முசிறி, உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். 

இருப்பினும் இக்கோவிலை போன்றே திருச்சியில் காணப்படும் வயலூர் முருகன் கோவில், மற்றும் உத்தமர்கோவில் கோவில்களிலும் திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும் அவையனைத்திற்கும் கோவில் நிர்வாகம் ரசீது வழங்கி வருவதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் அவையனைத்தும் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கின்றது என்பது தெரியவில்லை.

கடந்த ஆண்டு 2018 முதல் மார்ச் 2019 வரை திருச்சி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் 509 பேர் கர்பணியாக இருந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. இந்த ஆய்வு ரிப்போர்ட் தற்போது பெரிய அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கணக்கில் தெரிந்த புள்ளி விரம் இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு குழந்தைகள் இருக்கும் என்பதை எண்ணி பார்ப்பதே பெரிய அதிர்ச்சியாக உள்ளது.  

எனவே இதுபோன்ற சிறுமிகள் மறைமுகமாக பாதிக்கப்படுவதற்கு இதுபோன்ற கோவில்களும் காரணமாக அமைகிறது. நாளுக்கு  நாள் திருச்சியில் பெருகிவரும் குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் இக்கோவில் விஷயத்தில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம் .

ஜெ.கே…..

    

3

Leave A Reply

Your email address will not be published.