சமந்தாவுக்கு நன்றி சொன்ன சின்மயி

0
1

திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நிகழ்வதை தடுக்கும் விதமாக உருவாகியது மீ டூ இயக்கம். ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த இயக்கம் பாலிவுட், கோலிவுட் வரை விரிந்தது. இதன் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் கூறினர். இதனால் குற்றச்சாட்டுக்கு ஆளானோருடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என ஹாலிவுட், பாலிவுட் கலைஞர்கள் தெரிவித்தனர். இதில் கோலிவுட் மட்டும் வித்தியாசமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தவருடன் பணியாற்றமாட்டோம் என முடிவெடுத்தது.

 

அந்தவகையில் பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதாரவி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களைக் கூறிய சின்மயிக்கு தொடர்ச்சியாக டப்பிங் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சின்மயி கடைசியாக த்ரிஷா, விஜய் சேதுபதி இணைந்து நடித்த 96 திரைப்படத்துக்கு டப்பிங் பேசியதோடு அந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் பாடினார். அதன்பின் மீ டூ புகார் கூறியதை அடுத்து கடந்த எட்டு மாதங்களில் அவர் ஒரு படத்திற்குகூட டப்பிங் பேசவில்லை.

தற்போது ஓ பேபி படத்திற்காக சமந்தாவிற்கு குரல் கொடுத்துள்ளார். இந்த வாய்ப்புக்காக சமந்தாவுக்கும் இயக்குநர் நந்தினி ரெட்டிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “இங்கு ஒரு பெண்ணின் வாழ்வை சிறப்பாக்க மற்றொரு பெண்ணால்தான் முடியும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஓ பேபி படத்தில் சமந்தா கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச கிடைத்த வாய்ப்புக்கு சின்மயி நன்றி தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.