அஜித் 60: புதியப்பட தகவல்…

0
Business trichy

இயக்குநர்களுடன் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் தொடர்ந்து அவர்களோடு அடுத்தடுத்து இணைந்து பணியாற்றும் வழக்கத்தை ஆரம்பத்திலிருந்தே கடைபிடித்துவருபவர் அஜித். அந்தவகையில் இயக்குநர் சிவாவுடன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றிய அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்கவுள்ளார்.
பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கவுள்ளது.
இந்தப் படத்தின் பணிகள் ஆகஸ்ட் 29ஆம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. ஆக்‌ஷன், த்ரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கபடவுள்ள நிலையில் ஹெச்.வினோத், போனி கபூர் இருவரும் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.