திருச்சி மாவட்ட 867 ஏரி மற்றும் குளங்களில் மண் அள்ள விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 867 ஏரி மற்றும் குளங்களில் படிந் துள்ள வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற சிறு வகை கனிமங்களை விவசாயி கள் தங்கள் வயல்களில் பயன்படுத்தவும், பொதுமக்களின் சொந்த பயன்பாட்டிற்காகவும், மண்பாண்ட தொழில் செய்வோர் பயன்படுத்தவும் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் தாசில்தார்களால் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் தாசில்தார் அலுவலகங்களில் கட்டண மின்றி வழங்கப்படுகிறது.
விவசாயப் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா நகலை இணைத்து தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித் தால் உரிய ஆணை வழங்கப் படுகிறது. பொதுமக்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு சவுடு மண் இலவசமாக எடுக்க விரும்பினால், தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப் பித்து அதற்கான ஆணையைப் பெற்றுக்கொள்ளலாம்.

மண்பாண்டங்கள் செய்வ தற்கான களிமண் எடுக்க விண்ணப்பம் செய்வோருக்கு இலவசமாக களிமண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப் படும். இதற்கு சம்பந்தப்பட்ட தொழிலாளர் சங்கம் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயம், பொது பயன்பாடு மற்றும் மண் பாண்டம் செய்யும் நோக்கத் தில் மண் எடுக்க வழங்கப்படும் அனுமதி 20 நாட்கள் மட்டும் செல்லத்தக்கதாக இருக்கும். பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயனாளிகள் வண்டல் மண் மற்றும் சவுடுமண், களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 52 ஏரி, குளங்களுக்கும், பொதுப் பணித்துறை அரியாறு கோட் டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரி, குளங்களுக்கும் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 736 ஏரி, குளங்களுக்கும் ஆக மொத்தம் 867 ஏரி, குளங்களிலும் இலவசமாக மண் எடுத்துக் கொள்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நடைபெறும்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
