திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5பேர் கைது

0
D1

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது

N2

திருச்சி முசிறி அருகே லாரிகளில் மணல் கடத்திச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
முசிறி அருகே பாப்பாப்பட்டி பகுதியிலிருந்து காவிரி மணலை பவித்திரம் வழியாக லாரிகளில் கடத்திச் செல்வதாக, தா.பேட்டை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில், தா.பேட்டை போலீஸார் நீலியாம்பட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 டாரஸ் லாரி, ஒரு வேனில் மணலைக் கடத்தி வந்த ஜம்புமடை பாலசுப்பிரமணியன் (28) நாமக்கல் தனுஷ்பிரபு (32) தொட்டியம் மாதேசுவரன் (32), சிவக்குமார் (28), பிரபாகரன் (27) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.