திருச்சியில் SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தை அழிவுத் திட்டங்களின் சோதனைக் கூடமாக்கும் மத்திய, மாநில அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதனை கண்டித்து SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 18-06-19 செவ்வாய் அன்று மாலை 04.30 மணியளவில் ராமகிருஸ்ணா பாலம் அருகில் மரக்கடையில் நடைப்பெற்றது. கண்டன ஆர்பாட்டத்திற்கு மேற்கு தொகுதி தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். கண்டனஉரையாக மாவட்ட பொதுசெயாளர் நியமதுல்லா அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் சபியுல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். மேலும் மாவட்ட செயலாளர்கள் பொன்னகர் ரபிக் அவர்களும், முபாரக் அவர்களும், மாவட்ட பொருலாளர் பிச்சைகனி அவர்களும், மாவட்ட துணைத்தலைவர் ரஹீம் அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி, கிளை, நிர்வாகிகளும், சுமார் 100 நபர்களுக்கும் மேல் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

தமிழகத்தை அழிவுத்திட்டங்களின் சோதனைக்கூடமாக மோடி அரசு மாற்றிவருகின்றது. தமிழக விவசாயத்தை குறிவைத்து குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளை குறிவைத்து மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களை பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி செயல்படுத்தி வருகின்றது. விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசம் செய்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை காவல்துறை அடக்குமுறையுடன் கெயில் நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது.
அதேபோல் கூடங்குளத்தில் அணு உலைப் பூங்காக்களையும், தற்போது ஆபத்தான அணுக்கழிவை சேர்த்து வைக்கும் மையத்தையும் அமைக்கும் நடவடிக்கைகளை சர்வாதிகார போக்கில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுவருகின்றது.
அணு உலையே ஆபத்தானது அதனால் அதன் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என கூடங்குளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும், ஒட்டுமொத்த தமிழக மக்களும் போராடிவரும் நிலையில், அதனை விட பல ஆயிரம் மடங்கு ஆபத்து நிறைந்த, செறிவூட்டப்பட்ட அணுக்கழிவை கையாளும் எவ்வித தொழில்நுட்பமும் இந்தியாவிடம் இல்லாத நிலையில், அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவினை தற்காலிகமாக சேர்த்துவைக்கும் மையத்தை அமைக்கவிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஆளும் அதிமுக அரசும் அனுமதி அளித்து, மாநில மக்களின் நலனை நசுக்கி வருகின்றது.
முன்னதாக அணுக்கழிவு மையத்தை கர்நாடகா மாநிலம் கோலார் சுரங்கத்தில் அமைக்கவிருப்பதாக இந்திய அணுசக்திக்கழகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபோது, அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக இரண்டு நாட்களில் அந்த முயற்சியை மத்திய அரசு கைவிட்டது. அப்போது மாநிலத்தை ஆண்ட பாஜக அரசு கர்நாடகாவில் அணு திட்டங்களுக்கு எங்கும் அனுமதி கிடையாது என தெரிவித்தது. ஆனால் தமிழகத்தில் பெரும் மக்கள் எதிர்ப்பு வந்தபோதிலும் ஆளும் அரசுகள் சர்வாதிகாரப் போக்கில் அதனை கண்டுகொள்ளாது தொடர் அழிவுத்திட்டங்களை திணிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. மக்கள் கோரிக்கைகளை ஏற்பதில் கூட மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்தெழுந்து போராடினால் மட்டுமே தமிழகத்தை அழிவிலிருந்து காக்க முடியும்.
தேர்தலின் போது சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தின் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் தடை செய்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவினை மதிப்போம் என்று கூறிய தமிழக அரசு, தேர்தல் முடிந்த பின்னர் அந்த திட்டத்தினை செயல்படுத்த தீவிரம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நாசக்கார திட்டங்களை, விவசாயத்தை பாழாக்கும் திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.
இது தொடர்பாக நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திருச்சி மாவட்டம் ஆதரவு அளிக்கும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
