குடிநீருக்காக மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் மறியல்

0

மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள இரட்டியபட்டியில் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் வழங்காத நிலையில் ஒரு பகுதிக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடுவதாக கூறப்படுகிறது.

சந்தா 2

இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிக்கக்கூட தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு ஆளான பொதுமக்கள் நேற்று மாலை மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் இரட்டியபட்டியில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.