உயிர் வளர்ப்போம்-24

கதை வழி மருத்துவம் (அருளமுதம் எனும் அருமருந்து)

0
1

மனம் என்பது விளைநிலம் போன்றது, சிந்தனைகள் விதைகளாகின்றன.

மாயை சுத்த மாயை அசுத்த மாயை என இருவகைப்படும். இதில் சுத்தமாயை நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும், அசுத்த மாயை நம்மை உடல் நோய்க்கும் மன நோய்க்கும் ஆட்படுத்திவிடும். எனவே மாயையை தாய்போல் கருதி இறைவனிடம் சேர வேண்டும் என சித்தர்கள் உரைப்பார்கள்.

நான்கு அந்தகரணங்கள்

4

அந்தக்கரணங்கள் நான்கும் நமக்குள் அமைந்திருக்கக் கூடிய அற்புத கருவிகளாகும். இவை மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகியவையாகும். இந்த நான்கு அந்த காரணங்களை நிர்வகித்து நமது உள்நிலை, வெளிநிலை, செயல்பாடுகள், ஆற்றல், தன்மை ஆகிய அனைத்தையும் இந்த நான்கு அந்தக்கரணங்களே நிர்வகிக்கின்றன.

  1. மனம்:

மனித உடலில் மனம் என்கின்ற கருவியே தலையாய கருவி ஆகும். மனம்  படைத்ததால் தான் மனிதன் எனப் பெயர் பெற்றான். மனம் என்பது உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடியது, ஓயாமல் எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருக்கக் கூடியது. எண்ணங்களின் சுழற்சியால் மனமானது நிற்காமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. உணர்ச்சிகளின் பால் மனதினை சாய விடாமல் நேர்வழியில் நிறுத்தி வைப்பது ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமாகும். ஒருவருடைய உடலில் மனதினால் உண்டாகக்கூடிய நோய்களுக்கு, தன்னம்பிக்கையும், அன்புமே சரியான மருந்தாக அமையும்.

மனம் என்பது விளைநிலம் போன்றது, நாம் எதனை விதைக்கின்றோமோ, அதனை விளைநிலமானது பன்மடங்காக பெருக்கி கொடுக்கும். அதுபோல நம்முடைய மனதில் என்ன எண்ணங்களை நாம் விதைக்கின்றோமோ, அவற்றையே பன்மடங்காக நமது வாழ்வில் பெருக்கி கொடுக்கும் தன்மையைக் கொண்டது மனமாகும். இதனாலேயே பெரியோர்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என சொல்லி வைத்தார்கள். நாம் எண்ணுகின்றது  எதுவாயினும், அது நேர்மறையாகவும், நன்மையாகவும், இருக்கும் பட்சத்தில் நமது வாழ்வில் யாவும் நன்மையாகவே அமையும்.

2

ஒருவருடைய ஆரோக்கியத்தில் மனம் பெரும் பங்காற்றுகின்றது. மனதில் உள்ள எண்ணங்கள் உடலில் நோயை தோற்றுவிக்கின்றன. அவ்வாறு உடல் நோய் ஒருவருடைய மனதில் நோயை தோற்றுவிக்கின்றது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே நாம் மனதிற்கு நம்பிக்கையூட்டி வலுப்படுத்த வேண்டும். உடல் நோயோடு சேர்த்து, மன நோய்க்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே ஒரு மருத்துவரின் வார்த்தைகள் மற்றும் நோயாளியை சுற்றியுள்ளவரின் வார்த்தைகள் நேர்மறையாகவும், அவருக்கு நம்பிக்கையூட்டுபவையாகவும் அமைய வேண்டும்.”

 

யோகியார் இவ்வாறு விளக்கிக் கொண்டிருக்கும் போதே, அங்கு திடீரென “குருவே” என ஒரு குரல் ஒலித்தது. குரல் வந்த திசையில் வாலைச்செல்வி நின்று கொண்டிருந்தார். “அம்மா வாலைச்செல்வி என்ன வெண்டும்? எதற்காக அழைத்தாய்” என யோகியார் வினவினார். அதற்கு வாலைச் செல்வி “குருவே, நம்முடைய உடலில் இந்த ஆவணம் மனம் எங்கு இருக்கின்றது. இதனை அடக்குவதற்கு தான் உலகில் பல்வேறு யோகிகளும் ஆன்மீக சாதகர்களும் முயன்று தோற்றுப் போயிருக்கின்றனர். இந்த மனதினை தாங்கள் எனக்கு காட்ட இயலுமா?” என வினவினாள். வாலைச் செல்வியின் சாதுரியமான கேள்வியை கண்டு வியந்த யோகியார் அவளை வெகுவாக பாராட்டினார்.

“அம்மா செல்வி நீ கூறுவது உண்மைதான். அம்மா மனம் உடலில் எங்கு இருக்கிறது என்பதை அறியமுடியாமல் தான் இங்கு அனைவரும் அல்லல் படுகிறார்கள். இந்த மனதினை காட்டிக்கொடுக்க, ஒரு சற்குருவை நேரில் சந்தித்து உபதேசம் பெற வேண்டும். இருப்பினும் இந்த மனதினை காண்பதற்கு ஒரு நல் உபாயத்தை வழங்குகிறேன்” என்று கூறிய யோகியார் அனைவரையும் அரண்மனையின் முற்றத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது . அது இளம் சிவப்பு நிறத்தில் மனதிற்கு ரம்மியமான காட்சியாக விளங்கியது. யோகியார் அங்கு குழுமியிருந்த அனைவரையும் அங்கு அஸ்தமித்து கொண்டிருந்த சூரியனை கண்வெட்டாமல் கண்கொட்டாமல் பார்க்குமாறு ஆணையிட்டார்.

யோகியாரின் ஆணைப்படியே அனைவரும் சூரியன் மறையும் காட்சியை கண்கொட்டாமல் பார்த்தனர். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு யோகியார் அனைவரையும் “அப்படியே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தங்களுக்குள் தெரியும் காட்சியை பாருங்கள்” என்று பணித்தார். “அனைவரும் அந்த சூரியனின் பிம்பம் தங்களுக்குள் தெரிவதாக கூறினார்கள். அதற்கு யோகியார் “தங்களுக்குள் தெரிகின்ற இந்த சூரியனின் பிம்பம் நிஜமான ஒன்று அல்ல அதேசமயம் அது பொய்யும் அல்ல. இதுவரை நீங்கள் உங்கள் மனதில் காட்சிகளை கற்பனையாக கண்டிருப்பீர்கள் அல்லது நிதர்சனமாக நேரில் பார்த்திருப்பீர்கள்,

ஆனால் இப்பொழுது நீங்கள் காணுகின்ற இந்த காட்சி, கற்பனையும் அல்ல நிஜமும் அல்ல, இது தங்களுடைய மனதின் பிம்பம் ஆகும். இந்த காட்சி தோன்றுகின்ற இடமே தங்களுடைய மனம் ஆகும். சூரியன் மட்டுமல்ல சந்திரன் விளக்கு என ஒளிவீசக்கூடிய எந்த ஒரு பொருளின் மீதும் தங்களுடைய பார்வையை அசையாமல் நிறுத்தி பார்க்கும் பொழுது அதனுடைய பிம்பம் தங்களுடைய மனத்திரையில் தோன்றும். தங்களுக்குள் தோன்றுகின்ற இந்த பிம்பம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிலைத்திருக்கக்கூடிய தன்மையைக் கொண்டது. தங்களுடைய மனதின் கவனம் எவ்வளவு கூர்மையாக உள்ளதோ அவ்வளவு நேரம் அந்தக் காட்சி தங்களுக்குள் தெரியும். இவ்வாறு தினம் மனத்திரையை பார்த்து பழகி வர உங்கள் மனம் உங்கள் வசமாகும், மனதினுடைய ஆற்றல் பெருகும். இதுவே உலகத்தவர்கள் யாவரும் தங்களுடைய மனதினை அறியக்கூடிய எளிய வழிமுறை ஆகும்.

நம்முடைய மனத்திரையின் ஒரு பகுதியில் நம்முடைய மனதின் கவனத்தை குவிக்கும் பொழுது நமது மனமானது அடங்கி நம் வசம் ஆகின்றது(https://www.youtube.com/watch?v=v4FnX3l8LNQ மனத்திரை தியான பயிற்சி காணொளி) நம்முடைய மனமானது பார்வை வழியாகவே இயங்குகின்றது. இந்தப் பார்வையை உள்முகமாக மீண்டும் மனதின் மீதே திருப்புகின்ற எளிய யுக்தி இதுவாகும்  ” என விளக்கிய யோகியாருக்கு அனைவரும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்நேரத்தில், மன்னனுக்கு மட்டும் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.

 

(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிம்பத்தை வாசகர்கள் அனைவரும் கண்கொட்டாமல் இரண்டு நிமிடங்கள் பார்த்துவிட்டு பின்னர் கண்களை மூடி அமர்ந்து தங்களுக்குள் தெரிகின்ற பிம்பத்தை கண்டு பயிற்சி செய்யலாம் இவ்வாறு ஒரு நாளைக்கு இரு முறை பயிற்சி செய்துவர மனதின் ஆற்றல் மற்றும் கவனம் பெருகும் தங்கள் இல்லத்தில் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கும் இப்பயிற்சியை கற்றுக்கொடுத்து அவர்களின் மனதின் ஆற்றல் குவியம் மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்த உதவலாம்)

 

யோகியாரின் போதனைகள் தோடரும்…

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்