14 வயதில் இசை அமைப்பாளர்

0
Business trichy

பியானோ வாசிப்பதில் புதிய சாதனை படைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், அமெரிக்காவில் இசை போட்டியில் விருது வென்றுள்ளார்.

இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பள்ளியில் படித்தவர். பியானோவை மற்றவர்களை விட அதிவேகமாக வாசிப்பதில் தனித்திறன் பெற்றவர். அத்துடன் ஒரே சமயத்தில் இரு கையால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்தும் இவர் அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,  நாதஸ்வரத்தை அதிவேகமாகவும், இரண்டு பியானோக்களையும் வாசித்து இந்த விருதை பெற்றுள்ளார். அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

web designer

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கோர்டன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் லிடியனை வாழ்த்தியுள்ளனர்.தற்போது லிடியன் நாதஸ்வரம் சினிமா இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும், பர்ரோஸ் என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார்.

loan point

இந்தப் படத்தின் இயக்குனரும் மோகன்லால் தான். இந்த படம் 3டியில் தயாராகிறது. இதன் மூலம் குறைந்த வயது சினிமா இசை அமைப்பாளர் என்ற பெருமையும் லிடியன் நாதஸ்வரத்திற்கு கிடைத்துள்ளது

IAS academy

Leave A Reply

Your email address will not be published.