திருச்சி விமான நிலையத்தில் ரூ.24.76 லட்சம் தங்கம் பறிமுதல்

0
1

திருச்சி விமான நிலையத்தில் ரூ.24.76 லட்சம் தங்கம் பறிமுதல்

4

திருச்சி விமான நிலையத்தில் விமான பயணிகள் உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ.24.76 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து ஏர்-ஏசியா விமானத்தில் வெள்ளிக்கிழமை திருச்சி வந்த தஸ்பிகா ராணி (22) என்ற விமான பயணியின் உடைமைக்குள் 24 காரட் தரமுடைய 3 சிறிய அளவிலான தங்கக் கட்டிகள் 465 கிராம் எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சத்து 24 ஆயிரத்து 270 ஆகும். இதேபோல, இவர் 22 காரட் தரமுடைய 149.500 கிராம் எடையுள்ள இரு தங்க சங்கிலிகளையும் அனுமதியின்றி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 842 ஆகும்.

இதேபோல, கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர்-ஏசியா விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 24 காரட் தரமுடைய 148.500 கிராம் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகளையும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். விமானநிலையத்தில் நடைபெறும் சோதனைக்கு பயந்து பயணி ஒருவர் இதை விட்டுச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 783 ஆகும்.
இரு விமானங்களிலிருந்தும் மொத்தம் 764 கிராம் எடையுள்ள ரூ.24 லட்சத்து 76 ஆயிரத்து 895 மதிப்புள்ள தங்கம் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.