திருச்சி ரவுடி குண்டாஸில் கைது.

0
Business trichy

திருச்சியில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் ரௌடி கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முன்விரோதம் காரணமாக விஜயரகுவை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர் ரௌடி மு. பாபு என்கிற மிட்டாய் பாபு. இவர் மீது அரியமங்கலம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் 13 குற்ற வழக்குகள் உள்ளன.

Half page

எனவே, இவரை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்ய காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் பரிந்துரைத்தார். இதன் பேரில், ரௌடிபாபு என்கிற மிட்டாய்பாபுவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிறையிலுள்ள பாபுவிடம் இதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Full Page

Leave A Reply

Your email address will not be published.