திருச்சியில் குரூப்- 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – ஜூன் 26இல் தொடக்கம்!

0
1

திருச்சியில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி – ஜூன் 26இல் தொடக்கம்

 

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

 

2
4

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு 1.9.2019 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 26 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

 

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பாரதிதாசன் சாலை,கண்டோன்மென்ட்,திருச்சி-1 மற்றும் லால்குடி, மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,முசிறி மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் இலவச பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படவுள்ளது.

 

இப்பயிற்சி வகுப்பில்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகலுடன் துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகம், திருச்சி  அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரைப் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

3

Leave A Reply

Your email address will not be published.