குழந்தை திருமணத்திற்கு கைகோர்க்கும் திருச்சி அய்யாக்கண்ணு.

0
1 full

குழந்தை திருமணத்திற்கு கைகோர்க்கும் திருச்சி அய்யாக்கண்ணு.

தமிழகமெங்கும் குழந்தை திருமணத்தை ஒழிக்க மாவட்ட சமூக நல துறையும், குழந்தைகள் நல குழுமமும், குழந்தை உதவி மையங்களும் மாவட்டந் தோறும் இயங்கிவருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள் உதவி எண்ணான (1098) இரவு பகல் பாராமல் 24 மணி நேரங்களிலும் செயல்பட்டு வருகின்றது. இவ்வாறாக குழந்தை திருமணத்தை தடுக்க அரசு முற்படும் போது சில முக்கிய புள்ளிகளும், சட்டம் தெரிந்த நபர்களும் ஆகியோர் குழந்தைகள் நலனை கருதாது அவர்களை பாழுங்கிணற்றில் தள்ளி விடுகின்றனர்.

அரசு 18 வயது பூர்த்தியடையாத பெண்ணிற்கும், 21 வயது பூர்த்தியடையாத ஆணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்று சட்டம் வைத்துள்ளது. ஏனென்றால் அந்த வயதினை கடக்கும் வரை அவர்கள் குழந்தைகள் தான் ஒரு குடும்பத்தை ஏற்று நடத்தும் மன தைரியமும், உள்ளங்களும் அவர்களுக்கு இருப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்களை குழந்தையாக கவனித்து அவர்களுக்கு அவ்வயது வரை ஏற்படும் பிரச்சனைகள் குழப்பங்களை அரசே சரி செய்யும் விதமாக ஆலோசனையும் வழங்கி வருகிறது.

2 full

அவ்வகையில் திருச்சி துறையூரில் சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ( திருச்சியில் மத்தியிலும் சுற்றுப்புறங்களிலும் அதிகமாக காணப்பட்டு வரும் மக்களை கொண்ட
சமூகமாகும் ) திருமணம் நடைபெற இருந்தது, திருமண நடைபெற இருக்கும் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 7 மாதங்கள் இருக்க பெண்ணிற்கு திடீர் திருமணம் செய்யப்போவதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்ததின் அடிப்படையில் அதிகாரிகள் சிறுமியை நேரில் விசாரிக்க சென்றனர். அப்போது சிறுமியின் உறவினர்கள் சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டனர். பெண்ணின் பிறப்பு சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதல்களை வைத்து விசாரித்ததில் பெண்ணிற்கு இன்னும் 18 வயது பூத்தியடையவில்லை என்பது தெரிய வந்தது. மேலும் பெண்ணை மாவட்ட சமூக நல அலுவலர் முன் ஆஜராக அழைத்துச்செல்ல முற்பட்டபோது உறவினர்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்தனர். பின்னர் அதிகாரிகளுடன் சென்ற அப்பகுதி காவல் நிலைய அதிகாரிகள் உறவினர்களை சமாளித்து பின் உறவினர்களிடமிருந்து அதிகாரிகளை மீட்டு மறுநாள் பெண்ணின் பெற்றோர்களே மாவட்ட சமூக நல அலுவலர் முன் மகளை ஆஜராகுவதாக எழுத்துபூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு வரப்பட்டது.

மறுநாள் காலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சென்று திருச்சி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு நாங்க பெண்ணை விடுதியில் வைக்க அனுமதிக்க மாட்டோம், நாங்க திருமணத்தை நிறுத்திவிட்டோம் என்று கூறியுள்ளார் உடனே மாவட்ட ஆட்சியர் நீங்க இதற்கென தனியாக அதிகாரிகள் இருக்கின்றனர் அவர்களிடம் சென்று கூறுங்கள் அவங்க ஆலோசனை கொடுப்பாங்க என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர் சமூக நல துறை அதிகாரியிடம் பேசிய அய்யாக்கண்ணு மாவட்ட ஆட்சியரிடம் கூறியவாறே கூறியுள்ளார் அதற்கு அந்த அதிகாரி முதலில் சிறுமியை அழைத்து வாங்க அந்த சிறுமிக்கு நாங்க ஆலோசனை வழங்கணும் பின்னர் விடுதியில் வைப்பது குறித்து பேசிக்கலாம் என்றுள்ளார், 18 வயதுக்கு கிழ் இருக்கும் பெண்ணிற்கு திருமணம் செய்ய முற்பட்டதே சட்டபடி தவறு, இருப்பினும் நீங்கள் சிறுமியை எங்களிடம் ஒப்படைக்க மறுப்பது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் என்றார், அதற்கு அய்யாக்கண்ணு சிறுமியை விடுதியில் வைக்க நீங்க முற்பட்டால் நான் நீதி மன்றத்தின் இதை அனுக வேண்டியிருக்கும் என்று கூறிவிட்டு சிறுமியை அழைத்து வருகிறோம் சென்ற அய்யாக்கண்ணு இதுவரையிலும் எந்தவித பதிலும் அளிக்காமல் உள்ளார். மேலும் அச்சிறுமியை பார்க்க அதிகாரிகள் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அங்கு இருப்பதுமில்லையாம், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்கையில் அப்பெண் வெளியே எங்கயோ சென்று விட்டதாகவும் ஊரில் இல்லை என்று தகவல் கொடுத்து வருகின்றனர். மேலும் அய்யாக்கண்ணு இதுபோன்ற குழந்தை திருமண வழக்குகளில் அதிகாரிகளை வேலை பார்க்க விடாமலும், அவர்களுடைய கடமையினை செய்ய விடாமல் சிறுமியை 18 வயது முடியும் வரை மறைத்து வைத்து அவர்களை சமூக நலத்துறை அதிகாரிகளிடமோ, குழந்தைகள் நல குழுமத்திலோ ஆஜராக விடாமல் செய்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் தொடர்ந்து ஒரே சமூகத்தை சேர்ந்த குழந்தை திருமணத்தில் ஈடுப்பட்டு வருவதால் அதிகாரிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது என்கின்றனர்.

இதுத்தொடர்பாக அய்யாக்கண்ணு அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியபோது, அய்யா நீங்கள் சொல்லும் செய்தி புதிதாக இருக்கிறது. நான் வக்கீல் தொழிலை செய்வதே இல்லை அதனை விட்டு ரொம்ப நாள் ஆகிறது. நான் தற்போது வரை விவசாயிகளின் பிரச்சனையை குறித்து தான் எல்லாரிடமும் பேசி வருகின்றேன், மேலும் குழந்தை திருமண வழக்கில் நான் ஆஜராக்குவதற்கு எந்தவித சம்பந்தமும் எனக்கு இல்லை என்றார், மேலும் அவரிடம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருடைய திருமணங்களில் ஈடுபடுவதாக சொல்றாங்க நான் தேவை இல்லாததை பற்றி நான் ஒருபோது பேசுவதும் இல்லை, தலையிடுவது இல்லை,
சமீபத்தில் நீங்கள் துறையூரில் நடந்த ஒரு குழந்தை திருமணத்திற்காக திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியதாகவும், பின்னர் அவரிடம் அப்பெண்ணை விடுதியில் வைக்க அனுமதிக்க மாட்டோம்னு பேசினிக்கலாமே, மேலும் அந்த பெண்ணை சமூக நலத்துறையின் ஒப்படைப்பதாக கூறிவிட்டு பெண்ணை மறைத்து வைத்திருக்கிறீர்களாமே, விவசாயி சங்கங்களை ஒழிப்பதற்காக இதுபோன்ற தவறான செய்திகளை கூறி வருகின்றனர் நான் ஒரு போதும் இதுப்போன்ற விஷயங்களில் ஈடுபட்டதும் இல்லை, ஈடுப்படப்போவதும்மில்லை என்றார். 

2018 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019 வரை திருச்சி மாவட்டத்தில் 18 வயதிற்குட்டபட்ட சிறுமிகள் 509 பேர் கர்பமாக நிலையில் கர்ப்பம் தரித்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரி அவர்களால் கூறப்படுகிற அறிக்கையாகும். மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் அனைத்தும் குழந்தைகள் பாதுகாப்பில் அதிகாரிகள் முழுமையாக தலையிட விடாமல் செய்யும் நபர்களால் தான் இதுப்போன்ற தவறுகள் பெருகிவருகிறது என்று கூறப்படுகிறது.

ஜெ .கே……

3 half

Leave A Reply

Your email address will not be published.