திருச்சியில் இன்ஜினியரிங் மாணவி சரமாரியாக குத்திக் கொலை!

0
1

திருச்சியில் இன்ஜினியரிங் மாணவி சரமாரியாக குத்திக் கொலை.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண் படுகொலை என்பது தொடர்ந்து நிலவி வருகிறது, அதனடிப்படையில் 2018 ஏப்ரல் 30 அன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி லாவண்யா, 2019 மே 9 அன்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திலகவதி, 2018 மார்ச் 9 அன்று சென்னை கே கே நகர் பகுதியில் அஸ்வினி எனும் மாணவி, 2018 நவம்பர் 28 நெல்லையை சேர்ந்த மெர்சி ஆகியோர் ஒரு தலை காதல் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர், இதனைத்தொடர்ந்து இன்று ஜூன் 14, திருச்சியில் மேலும் ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவி பட்டபகலில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மாநகருக்குள்ளே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

4
2

திருச்சி தில்லைநகர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஐயப்பன் இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா (22). இவர் MTT இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முரளி(34). இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். முரளியும் மீராவும் உறவினர்கள். இந்நிலையில் முரளி மீராவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதற்கு மீரா தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய மீராவை வழிமறித்த முரளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே மீரா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீராவின் உறவினர்கள் முரளியை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த முரளி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் திருச்சி வாசிகளிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.கே….

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்