கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து டிடிஇ(TTE)க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து டிடிஇ(TTE)க்கள்
கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

டிடிஇ(TTE)க்களை அலைகழிக்கும் கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து திருச்சி டிவிசன் டிஆர்இயூ சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டிக்கெட் செக்கிங் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சனையான அமென்டட் சார்ட்(AMENDED CHART), மெயின் சார்ட்(MAIN CHART), ஆன்/ஆப் லாபி சிஸ்டம்(ON/OFF LOBBY SYSTEM) மூன்றையும் எம்எஸ் நுழைவுவாயிலின் அருகில் மாற்றித் தருகிறேன் என்று கூறி இதுவரை மாற்றித்தராமல் டிடிஇகளை வஞ்சிக்கும் இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கடந்த 13ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் திருச்சி டிவிசன் டிஆர்யூஇ சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
