இணையத்தில் ‘கில்லி’ முத்தமிழ் கருணாநிதி

0
Business trichy

மேலோட்டமாக பார்த்தால் இணையத்தில் பணியாற்ற கூடிய நேசமிகு நேரு ஐயாவின் மீது வெறிகொண்ட தொண்டர், சற்று கூர்ந்து நோக்கி பார்த்தால் ஆச்சரியப்படுகிறேன். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அவரை பின்தொடர்கிறேன், கே.என்.நேரு அனைத்து நிகழ்ச்சிகளையும் மினிட் பை மினிட் அப்டேட் செய்பவர். கே.என்.நேரு தற்போது எங்கு இருக்கிறார் என தெரிய வேண்டுமா ? முத்தமிழ் கருணாநிதி அவர்களின் டைம்லைன் பார்த்தால் போதும் சரியாக தெரியும், கே.என்.நேரு அப்டேட் மட்டுமல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் குறித்த பதிவும் அப்டேட் வந்து கொண்டே இருக்கும்,

இது மட்டுமா ?
திமுகழகத்தை இணையத்திலும், விவாதத்திலும் யாரேனும் விமர்சித்தால் அவருக்கே உரிய பாணியில் உடனடியாக பதில் பதிவு இடுவார். இன்றைக்கு தகவல் தொழில்நுட்ப அணி சாதித்து விட்டதாக சொல்கிறார்கள், இந்த அணி தொடங்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் “கில்லி” யாக செயல்பட்டு பேசப்படும் நபராக வலம் வந்தவர் முத்தமிழ் கருணாநிதி,
தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்து பதவி எடுக்கப்பட்ட போது இவருக்கு மாநில பொறுப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தேன். ஒருமுறை இவரிடம் நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் வேலை பார்த்து கொண்டு எப்படி திருச்சியில் கழக பணியாற்றுவீர்கள் என்று கேட்ட போது, அருகில் இருந்த சுபா.சந்திரசேகர் அண்ணே !!! தம்பி இணையத்தில் கில்லி என தலைவரிடம் சொன்னார், அந்த அளவிற்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

 

கே.என்.நேரு தகவல் தொடர்பு அட்மினாக அவரது பெயரில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப், வெப் பேஜ் என அனைத்திலும் அசத்தினார், வாட்சப்பில் பல குழுக்களுக்கு அட்மினாக அதிலும் அப்டேட்கள் .
கேட்கவே தலை சுத்துகிறதா ???
இணையத்தில் கழக பணியாற்றுவது சாதாரண விஷயமல்ல எத்தனை சண்டைகள், பிரச்சினைகள், விவாதங்கள், பல மிரட்டல்களும் வரும், ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இன்றைக்கு முத்தமிழ் கருணாநிதி என்ற பெயரை கேட்டால் எதிர் கட்சி இணைய தள நண்பர்கள் சொல்வது, முத்தமிழ் கருணாநிதியா ? அந்த ஆள் விவாதம் பன்றது சும்மா போற ஓணானை, மடியில் கட்டிய கதையாய், சாமினு அலறுவானுங்க.

Kavi furniture
MDMK

வைகோ, நடிகை கஸ்தூரி என அனைவரையும் தன் கழக பணியால் மிரட்டியவர்.
அனுதினமும் வேலை இல்லாமல் ஒருவன் சும்மா உட்கார்ந்து இத்தனையும் பன்னுனாலே கூட சத்தியமா பன்ன முடியாது. இத்தனை கழக பணியாற்றுகிறாரா, இவர் என்ன செய்கிறார் ? வேலை இல்லாமல் இந்த ஆள் இதெல்லாம் பன்றாறுனு மட்டும் நினைக்காதிங்க. முத்தமிழ் கருணாநிதி BE.,MBA முடித்தவர், தூத்துக்குடியில் ஒரு வங்கி மேலாளராக பணியாற்றுகிறார் !!!
நினைத்து பாருங்கள் வங்கி மேலாளர் என்றால் எவ்வளவு பணி சுமை ?
அந்த பணிச்சுமையிலும் கழக பணி. இந்த இளம் வயதில் வங்கியின் மேலாளர் என்றால் எந்த அளவிற்கு பணியாற்றிருப்பார், சாதாரண அலுவலராக பணியில் சேர்ந்து இன்று மேலாளராக உயர்ந்திருக்கிறார், தான் பார்க்கும் வேலையிலும் கில்லியாக கழக பணியிலும் கில்லியாக வலம் வருகிறார்.

நானும் என்னுடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் எத்தனையோ இணைய பணியாளர்களை பார்த்திருக்கிறேன், ஆரம்பித்த சில நாட்கள் பதிவுகள் அப்டேட்கள் வரும் பிறகு ஒருசில வருடங்களில் காணாமல் போய்விடுவிர்கள், நான் பார்த்த நாள் முதல் இன்று வரை அதே உத்வேகத்தோடு பணியற்றி வருபவர் “முத்தமிழ் கருணாநிதி”

– இ.இளஞ்சேரன் BE.,MBA

Pranav city

Leave A Reply

Your email address will not be published.