மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டும் மோடி

0

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், அதில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றும் மத்திய அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய திட்ட கமிஷன் என்று இருந்த அமைப்பை கடந்த முறை ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கினார். நிதி ஆயோக் அமைப்பில் அனைத்து மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய உயரதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

 

food

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில் முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி கூட்டப்படுகிறது என்றும், இதற்காக அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு அழைப்பு அனுப்பும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

 

நீர் நிர்வாகம், விவசாயம், மாவட்ட வாரியான வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற முக்கிய பிரச்னைகள் பற்றி நிதி ஆயோக்கின் முதல் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு விவகாரமும் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்து வரும் நக்சலைட் தீவிரவாதம் பற்றியும் முக்கியமாக நிதி ஆயோக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் 2015 பிப்ரவரி 8 அன்று நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் நடந்தது. அதன் பின் 2015 ஜூலை 15, 2017 ஏப்ரல் 23, 2018 ஜூன் 17 ஆகிய தினங்களில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. மோடியின் புதிய ஆட்சியில் முதன் முறையாக ஜூன் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.