மக்களவைத் தேர்தலில் 60 ஆயிரம் கோடி செலவு!

0
gif 1

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரூ. 60,000 கோடி செலவாகியுள்ளதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 17 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 தேதி வரை, மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் செலவுக்கான புள்ளிவிவரங்களை சிஎம்எஸ் (centre for media studies) என்கிற தனியார் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.

gif 3
gif 4

அதன்படி, இந்த 2019 மக்களவைத் தேர்தலானது ‘எங்கேயும், எப்போதும் இல்லாத அளவிற்கு, மிக விலை உயர்ந்த தேர்தலாக’ கருதப்படுகிறது. தேர்தலுக்கு 55 முதல் 60 ஆயிரம் கோடி வரை செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜக 45% செலவழித்துள்ளது. 1998 ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 9 ஆயிரம் கோடி செலவாகியதாகவும், தற்போது அதனைக் காட்டிலும் 6 முதல் 7 மடங்கு அதிகமாக செலவாகியிருக்கிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இம்முறை ஒரு வாக்குக்கு 700 ரூபாயும், ஒரு தொகுதிக்கு சுமார் 100 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வேட்பாளர்களும் அவரவர் தொகுதிக்கு கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வரை செலவழித்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சிஎம்எஸ் அறிக்கையின்படி 20 முதல் 25 சதவீத வாக்காளர்களுக்கு 12,000- 15,000 கோடியும், பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களுக்கு 20- 25 ஆயிரம் கோடி வரையிலும், போக்குவரத்துக்கு 5,000 – 6,000 வரையும், இதர செலவுகளுக்கு 3,000 – 6, 000 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.