ஓய்வு பெற்ற பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமிக்க ரயில்வே முடிவு

0
Full Page

ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுனர்களை தினக்கூலி அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தும் ரயில்வே முடிவுக்கு தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் ரயில் ஓட்டுனர்கள் பிரிவில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளது. பல மண்டல ரயில்வேகள் வழக்கமான ரயில்கள் இயக்க தடுமாறி வருகின்றன. இதனால் ரயில்வே வாரிய இயக்குனர் நிரஜ் குமார் கடந்த ஜீன் 4 ம் தேதி ஓய்வு பெற்ற உதவி லோகோ பைலட்டுகளை(ரயில் ஓட்டுனர்கள்) மீண்டும் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்த உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

 

மருத்துவ தகுதியுடன் கூடிய 60 முதல் 65 வயதிற்கு உட்பட்ட ஓய்வு பெற்ற ஓட்டுனர் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். ஜல்லி கற்கள், ரயில்வே தளவாடங்கள் ஏற்றிச் செல்லும் துறை ரயில்கள் இயக்க, பெரிய ரயில் நிலையங்களில் என்ஜின்கள் அவிழ்த்து பூட்ட, பராமரிப்பு யார்டுகளுக்குபெட்டிகள் கொண்டு சென்று வர இவர்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது.
தெற்கு ரயில்வேயில் 835 என்ஜின்கள், 4 ஆயிரத்து 798 ரயில் ஓட்டுனர் பணியிடங்கள் உள்ளது. இதில் 539 காலியிடங்கள். தற்சமயம் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு ஓட்டுனர் பயிற்சியில் இருக்கிறார்கள். தேர்வு வாரியம் 528 உதவி ஓட்டுனர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. இவர்கள் பணியில் சேர ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும்.
இதனால் தெற்கு ரயில்வே ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுனர்களை மீண்டும் பணியமர்த்த இருக்கிறது.

 

Half page

பயணிகள் ரயில்கள் இயக்க அனுமதிக்காமல் ரயில் நிலைய சன்டிங் என்ஜின்கள், துறைக்கான ரயில்கள் மட்டும் இயக்க அனுமதித்து இருப்பதில் இருந்தே, இவர்களால் விபத்து ஏற்பட்டால் பெரிய பின் விளைவுகள் இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு நிர்வாகத்திற்கு இருப்பது தெளிவாகிறது. ரயில் நிலையங்களுக்குள் சன்டிங் செய்வதில் நிகழ்ந்து நிறைய விபத்துகள் இருக்கிறது. விபத்து நிகழ்ந்தால் இவர்களை விசாரணை வலையத்திற்குள் கூட கொண்டு வர முடியாது.
விபத்துக்கள் எண்ணிக்கை குறைக்கவே ரூ.1 லட்சம் கோடி பாதுகாப்பு நிதி மத்திய அரசு உருவாக்கியது.

 

ரயில்வே கேட்டுகளை அனைத்தையும் ஆட்கள் உள்ளதாக மாற்றியது. தண்டவாள பராமரிப்பு நேரம் உருவாக்கியது.
விபத்துக்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு நிதியாண்டுகளாக இரட்டை இலக்கத்தில் குறைந்தும் இருக்கிறது.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வு அடைந்து இருப்பவர்களால் விபத்துகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். ஒருபுறம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமகன்களாக கருதி ரயில்வே சலுகை வழங்குகிறது. மறுபுறம் அவர்களை கொண்டு ரயில்கள் இயக்க முனைகிறது. காலிப்பணியிடங்களை முன்கூட்டி நிரப்ப திட்டமிடாததே இதற்கு காரணம். எனவே ரயில்வேத்துறை இத்திட்டத்தை கை விட வேண்டும். தேர்வு ஆணைய நடைமுறைகள் துரிதப்படுத்த வேண்டும்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.