
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதே வேளையில் 22 சட்டமன்ற இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களையும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தல் 18 இடங்களுக்கு மட்டுமே முதலில் அறிவிக்கப்பட்டது.
எஞ்சிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி நடைபெற்றது. 18 சட்டமன்ற இடைத் தேர்தலில் வேட்பாளர்கள் அனைத்து கட்சியிலிருந்தும் அறிவிக்கப்பட்ட பின்பு நம்ம திருச்சி இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பில் இறங்கியது.

கடந்து தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு விவரங்களையும், தற்போது அமைந்துள்ள கூட்டணிக் கட்சிகளின் வாக்கு விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எவ்வளவு வாக்குகளை பெறும் என்பது கணிக்கப்பட்டது.
‘கருத்துக் கணிப்பின் முடிவில் (18 தொகுதிகளுக்கு மட்டும்) திமுக 12 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது 22 இடங்களில் திமுக 13 இடங்களையும் அதிமுக 9 இடங்களையும் பெற்றுள்ளன. இது ntrichy.com வார இதழின் கணிப்புக்குக் கிடைத்த வெற்றியாகும்.
கருத்துக்கணிப்பை வெளியிட்டபோது அச்செய்தியின் இறுதியில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்பதையும் அதிமுக ஆட்சியே தொடரும் என்று நம்ம திருச்சி அழுத்தமாக பதிவு செய்திருந்தது. இந்தக் கணிப்பும் தற்போது உறுதியாகியுள்ளது.
