வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா

0
1

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய தோல்விக்குப் பின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ரேபரேலி எம்பியுமான சோனியா காந்தி தனது தொகுதி மக்களுக்கு மே 26கடிதம் எழுதியிருக்கிறார்.
80 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் வென்ற ஒரே தொகுதி சோனியாவின் ரேபரேலி மட்டுமே.

4

தன்னை மீண்டும் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்தமைக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சோனியா,
“கடந்த காலத்தைப் போலவே என்னை மீண்டும் உங்கள் பிரதிநிதியாக தேர்வு செய்திருக்கிறீர்கள். இந்த வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி சொல்வதைத் தாண்டி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயமரியாதைக் கட்சி ஆகிய தோழமைக் கட்சியினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கடிதத்தில் கூறியுள்ள சோனியா மேலும்,
“வரக்கூடிய நாட்கள் நமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.

 

ஆனால் உங்களின் ஆதரவு, நம்பிக்கையோடு காங்கிரஸ் கட்சி எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. இந்தப் போராட்டம் எத்தனை காலம் தொடர்ந்தாலும், காங்கிரசின் பாரம்பரிய குணத்தோடு இந்த நாட்டின் அடிப்படை மதிப்பீடுகளை, மாண்புகளைக் காப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று ரேபரேலி மக்களுக்கு சொல்லியிருக்கிறார் சோனியா.
ரேபரேலி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் அவரது வார்த்தைகள் நாட்டு மக்களுக்கான காங்கிரசின் செய்தியாகவே பார்க்கப்படுகிறது

3

Leave A Reply

Your email address will not be published.