“மறைந்த நகைச்சுவை நடிகர்”

0
1

நேற்று பிற்பகல் மாரடைப்பால் காலமான நாடக ஆசிரியர் வசனகர்த்தா நடிகருமான திரு.கிரேஸி மோகன் அவர்களுக்கு”நம்ம திருச்சி”சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.சுருக்கமாக யாரும் அறியப்படாத”கிரேஸி” அவர்களின் புதிய தகவல்கள்:

மோகன் அவர்கள் பிறந்தது அக்டோபர் 16,1952,படித்தது அண்ணாமலை யுனிவர்சிட்டியில் மெக்கானிக் இன்ஜினியரிங்.வேலை பார்த்தது டி.வி.எஸ்.பின்னர் “கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்”என்கின்ற நடிகர் திரு.எஸ்.வி.சேகர் அவரின் நாடகத்தில் வசனம் எழுதினார்.அந்த நாடகம் ஹிட் அடிக்கவே மோகன் முன்னாள் “கிரேஸி”தொற்றிக்கொண்டது. டி.வி.எஸ்.ஸில் இருந்து விலகி விகடன் குழுமத்தில் பத்திரிக்கையாளராக இணைந்தார்.மறைந்த இயக்குனர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் கிரேஸியின் நாடகத்தை “பொய்க்கால் குதிரை” என்கின்ற திரைப்படமாக எடுக்க.அதனைத் தொடர்ந்து நடிகர் திரு.கமலஹாசன் அவர்கள் கிரேஸி மோகனை வேலையை விடச்சொல்லி “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அவதரிக்க தொடர்ந்து முன்னேறினார் கிரேஸி.”ஆஹா”,”அவ்வை சண்முகி”,”அருணாச்சலம்”, “ரட்சகன்”,”மைக்கேல் மதன காமராஜன்”,”சதிலீலாவதி”, “மகளிர் மட்டும்”,”வசூல்ராஜா எம்பிபிஎஸ்”,”சின்ன வாத்தியார்”,”பூவெல்லாம் கேட்டுப்பார்”,”காதலா காதலா”, “பம்மல் கே சம்பந்தம்”,போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
பெரும்பாலும் இவர் வசனம் எழுதும் திரைப்படங்களின் ஹீரோயின்களின் பெயர்கள் ஜானகி என்றாகவே இருக்கும்.காரணம் கிரேஸியின் ஆசிரியையின் பெயர் ஜானகி.இவர் தான் கிரேஸி மோகனை முதல்முறையாக பள்ளிப்பருவத்தில் மேடை நாடகங்களில் ஏற்றி அழகு பார்த்தவர்.தன் நாடகத்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை புற்றுநோய் மருத்துவமனைக்கும்,சிறுநீரக மருத்துவமனைக்கும், நன்கொடையாக வழங்குவாராம் கிரேஸி. திருச்சியில் புற்றுநோய் மருத்துவமனையான “ஹர்ஷமித்ரா”மருத்துவமனை சார்பாக தேவர் ஹாலில் “சாக்லேட் கிருஷ்ணா”நாடகம் போடப்பட்டது.அதில் பேசிய கிரேஸி எனக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டு அதனால கேன்சர் வருமா? என்று நான் டாக்டரிடம் கேட்டேன்.கண்டிப்பாக வரும் என்றார்”சார் புகையிலை போடுறதை நிற்பாட்டினால் வேற சில கெட்ட பழக்கங்கள் என்னை தொற்றிக்கொள்ளும் அதனால இந்த பழக்கத்தை விட முடியலை சாரி சார்” ஆனால் படிப்படியாக குறைத்துக் கொள்கின்றேன் என்றார்.கண்டிப்பாக அவர் அன்று புகையிலையை குறைத்துக்கொண்டால் இன்று அவரின் ஆயுள் காலம் கூடி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனை தமிழ் கலைஞர்கள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தீய பழக்கத்தை குறைத்துக்கொண்டு தமிழ் சமூகத்திற்கு கலை பணிகளை தொடர வேண்டும் என இதன்மூலம் முன்வைக்கின்றோம்.

3

Leave A Reply

Your email address will not be published.