50 கவுன்சிலர் சீட்டு ஜெயிச்சா தான் மேயர் பதவி கிடைக்கும்: கே.என்.நேரு

0
Business trichy

திருச்சியில் கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தின் முன்புறம் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆளுயரத்தில் அமைந்துள்ள இந்த சிலைகளை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

web designer

இப்பணிகளை காலை திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது மாநகர செயலாளர் அன்பழகன், திருவரம்பூர் எம்.எல்.ஏ. அன்பில்மகேஷ், மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விழாவுக்கான பந்தல் ஏற்பாடுகளை பந்தல்சிவா தலைமையில் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பந்தல் சிவா கே.என்.நேருவை பார்த்து அண்ணே, தலைவர் அண்ணா, கலைஞர் சிலை திறக்கும் இடம் மிக சின்னதாக இருக்கிறது. அதனால அங்க யாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்று முன்கூட்டியே ஒரு அனுமதி சீட்டு கொடுத்து நெருக்கடி இல்லாம பண்ணிடலாம் என்று ஒரு ஐடியா சொன்னார். உடனே கே.என்.நேரு தன்னுடைய வழக்கமான பாணியில் என்னையா சொல்ற, நாலுபேரு முட்டி மோதிகிட்டு நின்னா தான் அரசியல் கட்சி, கூட்டமே இல்லாம 10 பேர் நின்னுகிட்டு இருந்தா அதுக்கு பேரு அரசியல் கட்சியில்ல. என்ன இந்த இடத்துல 100, 200 நிக்கமுடியுமா? நின்னுட்டு போறாங்க, மத்தவுங்க வெளியே நின்னு பாத்துட்டு போறாங்க என்று நிகழ்கால அரசியலை சேர்த்து சொல்லவும் அந்த இடமே கலகலப்பானது.

இதன் பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு கடந்த முறை தேர்தலில் நின்று வெற்றி பெறுவதற்கு 10எல் வரை செலவு ஆனது. இந்த முறை அதை விட கொஞ்சம் அதிகமாக தான் செலவு ஆகும் என்பது உங்களுக்கு தெரியும். கட்சியில் நான் நீண்ட கால உறுப்பினர், அதனால் எனக்கு சீட்டு கொடுங்க என்று யாரும் கேட்காதீங்க, சீட்டு கிடைக்கலன்னு வருத்தப்படாதீங்க, உங்கள் செலவுகளை சமாளிக்க முடியும்னா சீட்டு கேளுங்க., தேர்தலில் அடிப்படையை நீங்க செஞ்சீங்கனா மத்தப்படி ஜெயிக்கிறதுக்கு என்ன பண்ணணுமோ அதை நாங்க செஞ்சு கொடுக்கிறோம்.
இந்த முறை திருச்சி கவுன்சிலர் தேர்தலில் 65 வார்டு உள்ளது. இதில் 50 கவுன்சிலர் சீட்டுகளை வென்றாகவேண்டும் அப்போது தான் மேயர் சீட்டு நமக்கு கிடைக்கும். அதை மனதில் வைத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.